சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரபாஸால் சிக்கலில் விஜய்.. விழிபிதுங்கி நிற்கும் சன் பிக்சர்ஸ்

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதேஷ்யாம் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தால் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, காமெடியனாக யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகளை தீபாவளிக்கு முன்னதாகவே முடித்துவிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

beast-second-look-cinemapettai
beast-second-look-cinemapettai

விஜய் பெரும்பாலும் தன்னுடைய படங்கள் பண்டிகை தினங்களில் வெளியாவதை விரும்புவார் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பொங்கல் பண்டிகையை குறி வைத்தது. ஆனால் அதே நேரத்தில் தான் பிரபாஸ் நடிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ராதேஷ்யாம் என்ற படம் வெளியாக உள்ளது.

தமிழில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல தெலுங்கில் அதே நாட்களில் சங்கராந்தி என்றும் விழாவைக் கொண்டாடுவார்கள். அந்த விழாவை முன்னிட்டு பிரபாஸின் ராதேஷ்யாம் படம் களமிறங்க உள்ளது. கண்டிப்பாக இந்த படத்திற்கு கணிசமான திரையரங்குகள் கொடுக்கப்பட்டுவிடும்.

prabhas-radhesyam-cinemapettai
prabhas-radhesyam-cinemapettai

விஜய்யின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் தெலுங்கு சினிமாவில் பிக்கப் ஆகி கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வளவு பெரிய படம் வரும்போது பீஸ்ட் படத்தை இறக்குவது வேஸ்ட் தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இருந்தாலும் விஜய் தன்னுடைய உண்மையான மார்க்கெட்டை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அந்த தேதியை விட்டுக்கொடுக்க மாட்டாராம்.

Trending News