வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அரசியலுக்காக மாணவர்களை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. 50 வருடங்களுக்கு முன்பே செய்து அலுத்துப்போன நடிகர்

Actor Vijay: விஜய் தற்போது நடிப்பில் கொடி கட்டி பறந்து வசூல் மன்னனாக இருக்கிறார். இதை வைத்து அரசியலிலும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கு அஸ்திவாரமாக பல வேலைகளை செய்து வருகிறார். அதற்கு முதற்கட்டமாக மாணவர்களை பகடைக்காயாக யூஸ் பண்ணுகிறார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தொடர்ந்து நிறைய உதவிகளை செய்து வருகிறார். அதில் தற்போது மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி குறையை தீர்க்கும் ஒருவராக அவர்களின் மனதில் இடம் பிடிக்க இருக்கிறார். இவர் இப்படி செய்வதை பல பேர் கிண்டல் அடித்துள்ளனர்.

Also read: விஜய்யின் பின்னால் இருக்கும் பெரிய அரசியல் புள்ளி?. ஆடிப்போன மக்கள் இயக்க நிர்வாகிகள்

ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் அவருடைய அரசியல் பிரவேசத்திற்காக இதை தொடர்ந்து செய்வதற்கு தயாராக தான் இருக்கிறார். இதே போல தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவாஜி கணேசன் 1959 இல் மாணவர்களின் கல்வி செலவுக்காக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார்.

இந்தத் தொகை தற்போது மதிப்பு படி பார்த்தால் 85,198,669 ரூபாய்க்கு சமம். இவ்வளவு பெரிய தொகையை எந்த ஒரு நடிகரும் கொடுத்திருக்க முடியாது. ஏன் விஜய் கூட இந்த உதவியை செய்திருக்க முன்வந்திருக்க மாட்டார். ஆனால் இதையெல்லாம் சிவாஜி செய்தும் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.

Also read: விஜய் போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 முடிவதற்குள் ஒரு வழி ஆயிடுவாரு போல

மக்கள் அவரை ஒதுக்கி தான் வைத்தனர் என்பது தான் முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படி சிவாஜி போல சில நடிகர்கள் செய்து அலுத்துப்போன நிலையில் பழைய டெக்னிக்கை விஜய் தற்போது செய்து வருகிறார்.

இது இவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. இதற்கு பதிலாக விஜய் வேறு ஏதாவது முயற்சி செய்யலாம் என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர். ஆனால் விஜய் சரியாக பிளான் பண்ணி தான் களமிறங்கி இருக்கிறார். அதாவது அவருக்கு எங்கே தொட்டால் கிளிக் ஆகும் என்பது தெரிந்து செயல்பட்டு வருகிறார்.

Also read: நாங்க பிரபலமாக்குறோம் என கூப்பிட்ட விஜய் டிவி.. அட்ரஸ் கூட தெரியாமல் காணாமல் போன 5 செலிபிரிட்டி

Trending News