வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மூணு வருஷத்துல விஜய்யை காலி செய்யணும்.. 4 பான் இந்தியா இயக்குனர்களுடன் கூட்டணி போடும் அஜித்

Actor Vijay and Ajith: சினிமா இந்த அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறது என்றால் அதற்கு இரண்டு நடிகர்களுக்கு இடையே நிலவுகிற போட்டியால் தான் என்றே சொல்லலாம். அந்த வகையில் எம்ஜிஆர்-சிவாஜி காலங்களிலிருந்து தற்போது சிம்பு -தனுஷ் வரை போட்டி போட்டு வளர்ந்து வந்ததோடு மட்டுமில்லாமல் அவர்கள் கூடவே சினிமா துறையும் வளர்ந்து வருகிறது.

அந்த வகையில் விஜய் அஜித்துக்கு 90-ல் ஆரம்பித்த போட்டி தற்போது வரை நீடித்து வருகிறது. அத்துடன் இவர்களுடைய ரசிகர்களும் மோதிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. அதில் எப்பொழுதுமே அஜித்தை விட ஒரு படி கெத்தாக இருக்கிறது விஜய் தான். அதற்கு காரணம் அவர் சினிமாவிற்கு முழுமையாக கொடுக்கும் பங்களிப்பு.

Also read: விஜயகாந்தை ரோல் மாடலாய் எடுக்கும் தளபதி.. விஜய்யின் அரசியல் புதிய கருத்துக்கணிப்பு

அதன் விளைவாகத்தான் திரும்புகிற இடமெல்லாம் விஜய்யின் புகழ் கொடி கட்டி பறக்கிறது. மேலும் இந்தப் புகழை வைத்துக்கொண்டு அரசியலிலும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்று முழு முயற்சியுடன் இறங்க இருக்கிறார். அது சம்பந்தமான வேலைகளை பார்ப்பதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும் என்பதால் சினிமாவில் இவருடைய கவனம் சற்று குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அந்த நேரத்தில் விஜய்யை காலி பண்ணலாம் என்ற நினைப்பில் அஜித் முனைப்புடன் செயல்பட இருக்கிறார். அதாவது விஜய் அரசியலுக்காக எடுக்கும் இந்த மூணு வருஷ கேப்பில் அஜித் நான்கு பான் இந்தியா இயக்குனர்களுடன் கூட்டணி போட இருக்கிறார். ஏற்கனவே இவருடைய துணிவு படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Also read: விஜய்யை சந்திக்க கேரவனுக்கு வெளியில் காத்திருந்த அஜித்.. பதட்டத்தில் தளபதி என்ன சொன்னார் தெரியுமா.?

இதை அப்படியே தக்க வைத்துக் கொள்வதற்காக தற்போது அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் படம் பண்ண இருக்கிறார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவை கைக்குள் வைத்திருக்கும் பிரம்மாண்ட இயக்குனராக எஸ் எஸ் ராஜமௌலியுடன் கூட்டணி வைக்க இருக்கிறார்.

அடுத்ததாக இவர் இயக்கிய படம் தான் எல்லா பக்கமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாத் நீல்,இவருடன் ஏகே 65 ப்ராஜெக்டை பண்ணப் போகிறார். இப்படி தொடர்ந்து பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கப்போகிறார்.

Also read: பில்லாவில் நடிக்க மறுத்த ஹீரோ.. அஜித் மீது இருந்த வெறுப்பால் எடுத்த முடிவு

Trending News