வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் மேல் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளி.. ஒரே நாளில் கெட்ட பெயரை மாற்றிய தளபதி

Thalapathy Vijay: இந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அதிகமாக பேசப்பட்டது நடிகர் விஜய் பற்றி தான். விஜய் அடுத்து அரசியலுக்குள் நுழைய இருக்கிறார், 2026 தேர்தலில் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. இதனால் அடுத்தடுத்து அவர் மீது நிறைய நெகட்டிவ் விமர்சனங்களும் வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

விஜய்யின் அரசியல் நகர்வு முதற்கட்டமாக மாணவர்களை நோக்கி இருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. மாநில அளவில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டியது, இரவு நேர பாடசாலை, மாணவர்களுக்கான நூலகம் என அடுத்தடுத்து கல்வியை மையமாக வைத்து மக்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே லியோ பட வெற்றி விழாவின் போது விஜய் பேசிய சில விஷயங்கள் அவருக்கு நெகட்டிவ் ஆக மாறிக்கொண்டிருந்தது. இது போதாது என்று மிக் ஜாம் புயல் சமயத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்த சில விஷயங்கள் விஜய்க்கு மொத்தமாக கரும்புள்ளியாக மாறியது. மக்களுக்கு உணவு வழங்கும் இடத்தில் விஜய்யின் போட்டோவை வைத்துக் கொண்டு நின்றது, ஏற்கனவே இருந்த குப்பையை புஸ்ஸி ஆனந்த் கிளறிவிட்டு குப்பையை சுத்தம் செய்வது போல் வீடியோ எடுத்தது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.

Also Read:புஸ்ஸி ஆனந்த் செய்த வேலையால் அசிங்கப்பட்ட விஜய்.. கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தளபதி

விஜய் வழக்கமான அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார், பப்ளிசிட்டி தேடி கொள்கிறார் என அவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. ஒரு சிலர் அஜித்துடன் விஜய் செய்த விஷயத்தை ஒப்பிட்டு, அஜித் செய்யும் உதவி வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் விஜய் இப்படி மட்டமாக விளம்பரம் தேடுகிறார் என சரமாரியாக தாக்க ஆரம்பித்தார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் நடத்திய மருத்துவ முகாம்

தன்மேல் சுமத்தப்பட்ட கெட்ட பெயரை ஒரே நாளில் மாற்றி இருக்கிறார் தளபதி விஜய். சமீபத்தில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவ முகாமுக்கு வருபவர்களுக்கு மட்டும் சிகிச்சை என்று இல்லாமல், வர முடியாதவர்களை வீட்டிற்கு சென்று ஆட்டோவில் அழைத்து வந்து மருத்துவ சோதனை செய்து முடித்திருக்கிறார்கள்.

ஏழைகள் மற்றும் முடியாதவர்களை தேடி சென்று இப்படி உதவி செய்தால் கண்டிப்பாக விஜய் மக்கள் மனதில் நின்று விடுவார். இந்த மருத்துவ முகாமில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் எந்த இடத்திலுமே விஜய்யின் புகைப்படம் இல்லை. அவருடைய பெயரைக் கூட உச்சரிக்காமல் இந்த விஷயத்தை செய்திருக்கிறார்கள். தனக்கு கிடைத்த மொத்த கெட்ட பெயரையும் தளபதி மாற்றிவிட்டார்.

Also Read:ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

Trending News