பொங்கலை முன்னிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த வாரிசு படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. எப்போதுமே மாஸ் ஹீரோவாக காட்டிய விஜய்க்கு வம்சி, இதற்கு முன் தெலுங்கில் இயக்கிய படங்களின் சாயலில் ஒரு குடும்ப கதையை எழுதி, அதில் விஜய்யின் ஹீரோயிஸத்தையும் சேர்த்து இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்.
படம் முழுவதும் ஆக்சன் இல்லாவிட்டாலும் எமோஷனல் மூலம் ரசிகர்களை உருக வைத்திருக்கின்றனர். சமூகத்தில் பெரிய பிஸ்னஸ் மேன் ஆக இருக்கும் சரத்குமாருக்கு 3 மகன்கள் ஆக ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் இருக்கின்றனர். தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ வேண்டும் என அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் விஜய். அதன்பின் பெற்றோரின் 60-ம் கல்யாணத்தில் அம்மா வருத்தப்படுவதால் வீட்டிற்கு வருகிறார்.
Also Read: பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஒன் மேன் ஷோ.. வாரிசு அனல் பறக்கும் ட்விட்டர் ரிவ்யூ
அப்போதுதான் அப்பா சரத்குமாருக்கு கேன்சர் ஏற்பட்டிருப்பதும், இனி கம்பெனி பொறுப்பை விஜய்யை ஏற்றுக் கொள்ள வைக்கின்றனர். இதை பிடிக்காத அவரது அண்ணன்கள் ஸ்ரீகாந்த், ஷாம் வீட்டை வீட்டு வெளியேறுகின்றனர். இவ்வாறு குடும்பமும் கலைய மறுபக்கம் பிசினஸ் எதிரியான வில்லன் பிரகாஷ் ராஜ் சரத்குமாரின் பிசினஸை அழிக்க நினைக்கிறார். இவற்றையெல்லாம் விஜய் எப்படி சமாளித்து தனது குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார் என்பதுதான் வாரிசு படத்தின் கதை.
மொத்தமாக பார்த்தால் விஜய் என்கின்ற விராட் கோலியை வைத்துக்கொண்டு டி20 ஆடாமல் டெஸ்ட் மேட்சில் ஆட வைத்து விட்டார்களே என்ற உணர்வு தான் படம் முழுவதும் இருக்கிறது. ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படமாக இருப்பதால் இதில் ஹீரோயினுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இதனால் ரஞ்சிதமே பாடலைத் தவிர ராஷ்மிகாவின் இருப்பு பெருமளவு பேசப்படவில்லை.
Also Read: ஆன்லைன் புக்கிங்கில் முதலிடம் யாருக்கு தெரியுமா.? உச்சகட்ட மோதலில் வாரிசு Vs துணிவு
விஜய்க்கு பிறகு அவருடைய அப்பா சரத்குமார் மற்றும் அம்மாவான ஜெயசுதா, வில்லன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட கேரக்டர்கள் தான் முக்கிய கதாபாத்திரமாக இருக்கின்றனர். முதல் பாதியில் அவ்வப்போது யோகி பாபு சிரிக்க வைத்திருக்கிறார். மேலும் படத்தில் பெரிய பணக்காரர்கள் என்பதால் சரத்குமார் வீட்டை பிரம்மாண்ட செட்டாக உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் அந்த வீட்டிலேயே நகர்வதால் ஒரு டிவி சீரியல் பார்த்த உணரும் ரசிகர்களுக்கு தோன்றியது.
விஎஃப்எக்ஸ் காட்சிகளை இவ்வளவு சுமாராக செய்திருக்க வேண்டாம். வீட்டில் நடக்கும் சில காட்சிகள் கூட விஎஃப்எக்ஸ் என தெரிந்தது. அத்துடன் அவ்வளவு பெரிய பணக்கார விஜய்யின் குடும்பத்தினர் விருந்தினர் முன்பு தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறது. பணக்கார குடும்பத்தின் கதை என்பதால் பாமர ரசிகர்களுக்கு நெருக்கமான படமாக அமையாமல் போனது.
Also Read: அதிகாலை காட்சிக்கு தடை.. சண்டையால் வாரிசு, துணிவு படத்திற்கு அதிரடி உத்தரவிட்ட அரசு
இதனால் ஏறக்குறைய 3 மணி நேரம் திரையிடப்பட்ட வாரிசு படத்தில், இடம்பெற்றிருக்கும் 2 பாடல்களையும் சில காட்சிகளையும் தவறாமல் வெட்டி எறிந்திருக்கலாம். அப்படி செய்யாததால் பல இடங்களில் ரசிகர்களை தூங்க வைத்து விட்டனர். எப்படி இருந்தாலும் விஜய் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் ரசிகர்களுக்கு மட்டும் படம் பிடித்திருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்- 3/5.