சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

போட்டியாளர்களின் மூஞ்சியை உடைத்த எக்ஸ் போட்டியாளர்.. டைட்டில் வின்னருக்கு கிடைத்த அவமானம்

Tamil Bigg boss season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத பல புதுப்புது திருப்பங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் உள்ளே இருக்கும் போட்டியாளருக்கு டாஸ்க் வைத்து அதன் மூலம் ஒரு ஆப்பையும் வைத்திருக்கிறார்கள். அதாவது பிக் பாஸ் கொடுக்கிற போட்டியில் ஜெயித்தால் உள்ளிருக்க போட்டியாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

அதற்கு பதிலாக தோற்றுவிட்டால் உள்ளே இருப்பவர்களில் யாராவது இரண்டு நபர்கள் வெளியே போக வேண்டியதாக இருக்கும். அதே மாதிரி எலிமினேட் ஆகிப்போன போட்டியாளர்கள் யாராவது இரண்டு நபர்கள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அறிவிப்பு கொடுத்திருந்தார்கள். இதனாலேயே உள்ளிருக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் கொடுக்கிற டாஸ்கை வின் பண்ணி விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார்கள்.

ஆனால் அது வெறும் முயற்சியாகவே போய்விட்டது. பிக் பாஸ் வைத்த எல்லா விளையாட்டிலும் தோற்றுப் போய் விட்டார்கள். அந்த வகையில் எலிமினேட் ஆகி போன போட்டியாளர் ஒருவர் உள்ளே போயிருக்கிறார். அவர் யார் என்றால் இவருக்கு பொதுவாக வாய் பேசுவதை விட கை தான் அதிகமாக பேசும் என்றே சொல்லலாம். அதுதாங்க விஜய் வர்மா.

Also read: பிரதீப்பிடம் மண்டியிட்ட விஜய் டிவி.. டிஆர்பியை தூக்கி நிறுத்த கதறும் பிக் பாஸ்

அடாவடித்தனத்தை பேசக்கூடாது என்று கமல் எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும் தொடர்ந்து போட்டியாளர்களை பயமுறுத்தும் வகையில் இருந்ததால் கமல் ஸ்ட்ரைக் என்கிற ஒரு மஞ்சள் அட்டை கொடுத்து உடனடியாக வெளியே அனுப்பினார். அப்படிப்பட்டவர் மறுபடியும் உள்ளே புகுந்திருக்கிறார். போனதுமே பிக் பாஸ் இவரை வைத்து ஒரு பதனி வேலையை ஆரம்பித்து இருக்கிறது.

அதாவது சில போட்டியாளர்களின் புகைப்படம் இருக்கிறது. அவர்கள் எந்த மாதிரியாக விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று சொல்லி அவர்களின் புகைப்படத்தின் முகத்தில் கேம்பரை வைத்து அடித்து உடைக்கும் படியாக ஒரு கேம் இருக்கிறது. சும்மாவே விஜய் வர்மாவுக்கு அடிப்பதை பற்றி சொல்லிக் கொடுக்கவே தேவையில்லை. அந்த வகையில் கையில் ஒரு கேம்பர் கிடைக்கிறது என்றால் சும்மா விட்டு வைப்பாரா.

டைட்டில் வின்னர் விக்ரமுக்கு மாஸ்க் பொருத்தம் இல்லை, பூர்ணிமா நீங்கள் செய்தது மட்டுமே சரி என்று மற்றவர்களை பிரைன் வாஸ் பண்ணுகிறீர்கள் என்று கூறி இருக்கிறார். ரவீனா நீங்கள் மணிக்கு வாலாட்டுவதை மட்டுமே வேலையாக வைத்து வருகிறீர்கள் என்றும் ஒவ்வொரு போட்டியாளர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக விஜய் தரமான சம்பவத்தை செய்து வருகிறார். இவரைத் தொடர்ந்து அடுத்த போட்டியாளர் யார் உள்ளே வரப்போகிறார் என்ற பரபரப்பு அதிகமாக இருக்கிறது.

Also read: சைக்கோவுக்கும், சைக்காலஜிக்கும் நடக்கும் யுத்தம்.. இரு அணியான பிக் பாஸ் வீடு, வெற்றி யாருக்கு.?

Trending News