வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஓட்ட வாயை பூர்ணிமாவிடம் போட்டுக் கொடுத்த விஜய் வர்மா.. அநியாயமா ஒரு காதல் ஜோடிய பிரிச்சிட்டீங்களே!

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏற்கனவே மணி மற்றும் ரவீனா காதல் கன்டென்ட் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நடுவே விஷ்ணு மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே லவ் ட்ராக் ஆரம்பித்தபோது பார்வையாளர்களுக்கு பயங்கர கடுப்பாக இருந்தது. கூட்டத்தில் பூர்ணிமாவிடம் கத்தி பேசுவதும், தனியே போய் கட்டிப்பிடிப்பதுமாக இருந்தார் அமுல் பேபி விஷ்ணு.

பூர்ணிமாவுக்கும் விஷ்ணு மேல் ஈர்ப்பு இருப்பதாக அவ்வப்போது காட்டப்படுகிறது. இருந்தாலும் இருவருமே பிக் பாஸ் விளையாட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் இப்படி ஒரு லவ் ட்ராக்கை உருட்டுகிறார்கள் என்ற சந்தேகம் இருந்து வந்தது. எப்படியோ காதல் புறாக்களாக சுற்றி வந்த இந்த இரண்டு பேருக்கு நடுவே பத்த வைத்து வேடிக்கை பார்த்து விட்டார் விஜய் வர்மா.

Also Read:உருவ கேலி, பகிரங்க கொலை மிரட்டல்.. அத்துமீறி பேசிய நிக்சன், டிஆர்பிக்காக மட்டமாக உருட்டும் விஜய் டிவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் எனக்குத்தான் இந்த ஸ்டார் கொடுக்க வேண்டும் என்று பேச வேண்டும். அல்லது ஒரு நபருக்கு இந்த ஸ்டார் கிடைக்கக் கூடாது, அவர் இந்த விஷயங்களால் இந்த ஸ்டார் வாங்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று பேசி அவரை விளையாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

பூர்ணிமாவிடம் கொளுத்தி போட்ட விஜய் வருமா

இந்த விளையாட்டில் விஜய் வர்மா மற்றும் விஷ்ணு நேருக்கு நேர் மோதி கொண்டார்கள். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரத்தில் விஷ்ணு, பூர்ணிமாவை பற்றி பேசிய ஒரு விஷயத்தை அம்பலம் ஆக்கிவிட்டார் விஜய் வர்மா. அதாவது விஷ்ணு, பூர்ணிமாவை குறித்து இது எல்லாம் ஒரு பொண்ணா என கேட்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இவ கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போய் என்ன பண்ணுவாய் என்றும் கேட்டிருக்கிறார். பெண்களை இப்படி தவறாக பேசும் விஷ்ணுவுக்கு அந்த ஸ்டார் கிடைக்கக் கூடாது என விஜய் சொல்லி இருக்கிறார். விஷ்ணு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்கிறார். விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சரவணன் விக்ரம் நீங்கள் அப்படிப் பேசும் பொழுது அந்த இடத்தில் நானும் இருந்தேன் என்று சொல்கிறார்.

ஒரு பக்கம் விஷ்ணு பேசியது தவறு என்றாலும், இன்னொரு பக்கம் நம்மள பத்தி இப்படி எல்லாம் பேசுறாங்களா என அதிர்ச்சியின் உச்சத்தில் பூர்ணிமா திரு திரு என்று முழிப்பதை பார்ப்பதற்கு சிரிப்புதான் வருகிறது. விஷ்ணுவின் ஆட்டத்தை இப்படி மொத்தமாக போட்டு உடைத்து, இரண்டு காதல் இதயங்களை பிரித்து விட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Also Read:கேவலமான கெட்ட வார்த்தை பேசி வசமாக சிக்கிய பூர்ணிமா.. ரவுண்டு கட்டி அடித்த மணி, விஷ்ணு

Trending News