சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.? GOAT அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

GOAT Twitter Review: விஜய் ரசிகர்கள் மாத கணக்கில் தவம் இருந்த கோட் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில் பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே காட்சிகள் தொடங்கி விட்டது.

review-goat
review-goat

தமிழ்நாட்டில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் கோட் ஆதிக்கம் தான் நிறைந்துள்ளது.

review-goat
review-goat

அடுத்தடுத்து வரும் விமர்சனங்களும் பாசிட்டிவாக இருக்கும் சூழலில் ரசிகர்களின் ட்விட்டர் கருத்துக்கள் பற்றி இங்க காண்போம். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒரே கருத்து மங்காத்தா படத்தை விட கோட் ஆயிரம் மடங்கு சூப்பராக இருக்கிறது என்பதுதான்.

review-goat
review-goat

ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் விஜய்யின் அறிமுகக் காட்சி, டைட்டில் கார்டு, இடைவேளை, கிளைமாக்ஸ் என ஒவ்வொன்றும் திரையில் மேஜிக் செய்திருக்கிறது. ஏகப்பட்ட சர்ப்ரைஸ் மற்றும் கேமியோ கதாபாத்திரங்கள் படத்தில் நிறைந்துள்ளது.

review-goat
review-goat

அதிலும் விஜயகாந்த் வரும் காட்சிகள் புல்லரிக்க வைத்திருக்கிறது. உண்மையிலேயே இப்படம் அவருக்கான சிறந்த மரியாதை தான் என ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கூறி வருகின்றனர்.

review-goat
review-goat

மேலும் சண்டைக் காட்சிகள் டெக்னாலஜி என அனைத்துமே ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் விஜய் வெங்கட் பிரபுவின் மேஜிக் கோட் படத்தில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

விஜய்யின் கோட் தரிசனம் வெற்றியா.?

Trending News