புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வழிய போய் 5 லட்சம் பணம் கொடுத்த விஜய்.. அன்புடன் பெற்றுக்கொண்ட பிரபலம்

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் ராகவா லாரன்ஸிடம் கோச்சுகிட்ட சம்பவத்தை பற்றி தற்போது ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் தாண்டி, மாற்றுத்திறனாளி குழந்தைகள், இளைஞர்களுக்கு உதவிகளை அவரால் முடிந்த அளவுக்கு தனது சாரிட்டபிள் ட்ரஸ்டின் மூலமாக நிதிகளை திரட்டி உதவி செய்து கொண்டு வருகிறார். மேலும் இவரது சாரிட்டபிள் டிரஸ்டிற்கு பல நடிகர், நடிகைகளும் உதவி செய்து வருவர்.

இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் சிம்புவிற்கு தொலைபேசியில் அழைத்து தனது சாரிட்டபிள் டிரஸ்ட் இருக்கு பணம் அனுப்புமாறு உதவி கேட்டுள்ளார். உடனே சிம்புவும் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். இதனிடையே இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட தளபதி விஜய் ராகவா லாரன்ஸை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ஏன் நண்பா என்னிடம் எல்லாம் உதவி கேட்க மாட்டாயா என்று தளபதி விஜய் கேள்வி எழுப்பினார். உடனே ராகவா லாரன்ஸ் பதறிக்கொண்டு, அப்படி எல்லாம் இல்லை நண்பா, நீ பிஸியாக இருப்பாய் என்பதால் தான் உன்னிடம் உதவி கேட்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

உடனே தளபதி விஜய் ராகவா லாரன்சின் தேவையை புரிந்து கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் பணத்தினை அவரது சாரிட்டபிள் டிரஸ்டிற்கு அனுப்பி வைத்து உதவியுள்ளார்.
நடிகர் விஜய் பொதுவாகவே தன்னை சுற்றி உள்ள நண்பர்களுக்கு ஏதேனும் உதவி என்றால் கேட்ட உடனே செய்து கொடுப்பார். ஆனால் கேட்காமலேயே ராகவா லாரன்ஸுக்கு உதவிகளை செய்தது, தனக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இவரது பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில் தளபதி விஜய்க்கு உள்ள உதவும் மனப்பான்மையை பார்த்து அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தளபதி விஜயை போலவே அவரது ரசிகர்களும் பல உதவிகள் செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News