தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய மார்க்கெட் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார். மேலும் தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களிலும் விஜய்யின் படங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் தளபதி விஜய் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதை அவருடைய ஆரம்பகால பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அந்த ஆசை தற்போது வரை நிறைவேறவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.
விஜய் வளர்ந்து வந்த காலகட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமாவின் உச்ச கட்ட வியாபாரத்தில் இருந்தார். ரஜினியின் ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று வந்தன.
அந்த வகையில் ரஜினியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது படையப்பா. இந்த படத்தில் அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் பெரிதும் ஆசைப்பட்டு தானாகவே போய் கேஎஸ் ரவிக்குமாரிடம் வாய்ப்பு கேட்டாராம்.
ஆனால் அப்போதைய சூழ்நிலையில் விஜய்க்கு அந்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதில் பல சிக்கல்கள் இருந்ததால் அதை தவிர்த்து விட்டாராம் கேஎஸ் ரவிக்குமார். இதை விஜய்யே ஒரு மேடையில், ரஜினியுடன் படையப்பா படத்தில் நடிக்க நானே போய் வாய்ப்பு கேட்டேன் எனக் கூறியிருந்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.