வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எம்ஜிஆர் இடத்துக்கு ஆசைப்படும் விஜய்.. டெப்பாசிட் கூட கிடைக்காத படி அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகள்

Actor Vijay: அண்மை காலமாகவே விஜய்யின் அரசியல் நகர்வு குறித்த செயல்பாடுகள் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதிலும் அவர் எம்ஜிஆர் மாதிரி உருவெடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாக பலரும் வெளிப்படையாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது தான் தெரியவில்லை. அந்த வகையில் விஜயகாந்த் கூட எம்ஜிஆர் மாதிரி வரவேண்டும் என்று அரசியலுக்கு வந்தார். ஆனால் உண்மையாக இருந்தும் கூட அவர் தோற்றுப் போனார். தற்போது இவரை போல் தான் விஜய்யும் இறங்கி இருக்கிறார்.

Also read: லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்..தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

எப்படியாவது மக்கள் மனசை கவர்ந்து முதலமைச்சர் நாற்காலியை பிடித்து விட வேண்டும் என்று அவர் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அது எல்லாமே செயற்கை தனமாக தான் இருக்கிறது. மாணவர்களுடன் நடந்த சந்திப்பு, பட்டினி தினத்தில் உணவு கொடுத்தது, இரவு பாடசாலை என அவர் நல்ல விஷயங்களை செய்தாலும் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் பலரும் அறிந்தது தான்.

அதிலும் இதுபோன்ற விஷயங்களை அவர்களே விளம்பரப்படுத்திக் கொள்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. அப்படி செய்யும் உதவியில் கூட விஜய் போட்டோ இடம் பெறும் படி செய்து அதை மீடியாக்களில் கசிய விடுவதும் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. இப்படி எல்லாம் விளம்பரம் தேடும் புஸ்ஸி ஆனந்தை விஜய் கண்டுக்காமல் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also read: ஆடியோ உரிமத்தில் அதிக வசூல் வேட்டை ஆடிய 5 படங்கள்.. பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய லியோ

அது மட்டுமின்றி திரை பிரபலங்களே இது மிகவும் கேவலமான அரசியலாக இருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் அரசியல் பற்றிய எந்த அனுபவமும் இல்லாத இந்த அல்லக்கைகளால் விஜய்யின் கனவு தகர்ந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அந்த வகையில் விஜய் இதை கருத்தில் கொள்ளவில்லை என்றால் இந்த அல்லக்கைகளின் அக்கப்போரால் அவருக்கு டெப்பாசிட் கூட கிடைக்காமல் போய்விடும். அப்புறம் முதல்வர் நாற்காலி மட்டுமல்ல எம்எல்ஏ நாற்காலி கூட இவருக்கு கிடைக்காது என பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Also read: சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

Trending News