செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் ஜெயிலர், விக்ரம் வெற்றி.. விஜய் தான் எப்போதுமே நம்பர் ஒன்

Actor Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இப்போது வரை இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் ரஜினி, கமல் இருவரையும் தாண்டி விஜய் தான் எப்போதுமே நம்பர் ஒன் என வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.

அதாவது கமலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் படம் இடம் பெற்று இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படமும் இமாலய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இவ்வாறு ஜெயிலர் மற்றும் விக்ரம் வசூல் சாதனையை விஜய்யின் ஒரு படம் கூட இதுவரை முறியடிக்க வில்லை.

Also Read : கொட்டிய பணமழை, என் பங்குக்கு நானும் காலி பண்ணுவேன்.. புது அவதாரம் எடுத்த ரஜினியின் அடுத்த வாரிசு

ஆனாலும் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதற்கான காரணம் என்ன என்பதை அந்தணன் யூடியூப் ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது கமல் மற்றும் ரஜினி இருவருமே நடுவில் நிறைய பிளாப் கொடுத்து இருக்கிறார்கள். அத்தி பூத்தார் போல் எதிர்பார்க்காத வெற்றி தான் விக்ரம் மற்றும் ஜெயிலர்.

அதாவது காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இவர்கள் நடித்ததால் விக்ரம் மற்றும் ஜெயிலர் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது என்று சொல்லிவிட முடியாது. சூழ்நிலை காரணமாக இந்த படங்கள் வெற்றி மகுடத்தை சூடியது. ஆனால் விஜய் பொறுத்தவரையில் அவருடைய முந்தைய படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also Read : சொப்பனத்துல கூட யோசிக்கல சாரே, முதல் முறையாக முகத்தை காட்டிய வர்மன்.. ரஜினியால் வெளியில தல காட்ட முடியல

ஆனால் விஜய்யினால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் யாருக்குமே நஷ்டம் ஏற்படவில்லை. இவ்வாறு நடுநிலையாக தொடர்ச்சியான வெற்றியை விஜய் கொடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் விஜயால் ஏற்படாது என்பதே அவர் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம்.

அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு லியோ படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் எப்போதுமே தனது ஒவ்வொரு படத்திலும் எதிர்பாராத பல விஷயங்களை புகுத்தியிருக்கும் நிலையில் லியோ படமும் அதில் சளைத்தது இல்லை என்பதை கண்டிப்பாக நிரூபிக்க உள்ளார்.

Also Read : விஜய்க்கு வந்த வாய்ப்பு, தன் மகனுக்காக தட்டி பறித்த தயாரிப்பாளர்.. கூட்டு சேர்ந்து காலை வாரிய எஸ்ஏசி

Trending News