புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கேப்டனை பார்க்க தவியாய் தவித்த விஜய்.. விஜயகாந்தை தனிமைப்படுத்தி கண்ட்ரோலில் வைத்திருந்த குடும்பம்

Vijayakanth-Vijay: கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் பல பிரபலங்களை கை தூக்கி விட்டு இருக்கிறார். அதில் முக்கியமானவர் விஜய் என்பதை மறுக்க முடியாது. இப்படி தனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தவரை விஜய் உயிரோடு இருக்கும்போது ஏன் பார்க்க வரவில்லை? என்ற கேள்வி இப்போது மக்கள் மத்தியில் இருக்கிறது.

அதேபோல் நேற்று கேப்டனின் முகத்தை பார்க்க ஓடிவந்த விஜய்க்கு அவமரியாதையும் நடந்தது. இங்கிருந்து போ என பல தொண்டர்கள் அவரை பார்த்து கோஷமிட்டனர். உண்மையில் விஜய் கடந்த ஒரு வருடமாக தன் அண்ணன் கேப்டனை நேரில் பார்த்து விட தவியாய் தவித்து இருக்கிறார்.

அதற்காக கடும் முயற்சியும் செய்திருக்கிறார். ஆனால் கேப்டன் யாரையும் பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அது அவருடைய உடல் நிலைக்கு நல்லது கிடையாது என குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லையாம்.

Also read: அல்ப விஷயத்துக்காக எதிரியாய் மாறிய வடிவேலு.. கடைசி வரை பெரிய மனுஷன் என நிரூபித்த கேப்டன்

இதை விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ராதாரவி கூட ஒரு முறை வெளிப்படையாக தெரிவித்தார். எத்தனையோ முறை விஜியை பார்க்க முயற்சித்து குடும்பத்தாரிடம் கேட்டேன். ஆனால் அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். இதுபோல் பல பிரபலங்கள் கேப்டனை பார்க்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் கேப்டன் மொத்தமாக குடும்பத்தாரின் கண்ட்ரோலில் இருந்தது தான். அவர்கள் தான் விஜயகாந்தை தனிமைப்படுத்தி யாரையும் பார்க்கவிடாமல் செய்ததாக பல பேர் மீடியாவில் கூறியிருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்ச்சியால் தான் விஜய்யால் கேப்டனை உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியவில்லை.

Also read: கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த 15 பிரபலங்கள்.. உயிர் நண்பனை பிரிந்து தவிக்கும் ரஜினி

Trending News