சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

தலைவரு நிரந்தரம்.. முகமூடி போட்டு விஜய் செய்த செயல்.. யாருக்கு பயந்து இந்த வேலை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்ரு வெளியானது. இந்தப் படத்தைக் காண ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்களும் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஜெய்பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி காந்த் மட்டுமின்றி, நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தமிழ்நாட்டின் முக்கிய திரையரங்குகளில் நடிகர்கள் தனுஷ், விஜய், இசையமைப்பாளர் அனிருத் போன்ற பிரபலங்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

வந்தது தளபதி தானா?

ஆனால் நடிகர் விஜயை பொறுத்தவரையில், அவர் வந்தாரா என்பது உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏன் என்றால் மின்னல் வேகத்தில் வந்து படத்தை மட்டும் பார்த்துவிட்டு ஓடிட்டார். நடிகர் விஜய், சென்னையில் உள்ள பிரபல தேவி திரையரங்கில் ரஜினியின் வேட்டையன் படத்தை பார்க்க வந்துள்ளதாக சோசியல் மீடியாவில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

நீலநிற சட்டை அணிந்து வந்த விஜய், ரசிகர்கல் தன்னை அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக கைக்குட்டையால் முகத்தை கட்டியபடி வந்துள்ளார். என்னதான் தமிழ் திரையுலகில் பெரிய நடிகராக வலம் வந்தாலும், இவர் நடிகர் ரஜினியின் ரசிகராகவும் உள்ளார்.

எதற்கு இப்படி ஒரு வேஷம் போட்டு வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பலர், மக்களுக்கு பயந்து தான் அவர் இப்படி வந்திருப்பார் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தலைவரு நிரந்தரம் என்றும் ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News