திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நம்பர் ஒன் இடத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய விஜய்.. பாலிவுட்டை மிரள வைக்கும் தளபதி-68 சம்பளம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் விஜய்க்கும் முக்கிய படமாக இருக்கிறது. சொல்லப்போனால் அவர் நடித்த படங்களிலேயே இப்படத்திற்கான ஆர்வமும், எதிர்பார்ப்பும் தான் எக்கச்சக்கமாக உள்ளது. அது மட்டுமின்றி இப்படத்திற்கான ப்ரீ பிசினஸ் கூட வேற லெவலில் இருக்கிறது.

அதனாலேயே விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் தளபதி 68 படத்தை அட்லி தான் இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் தெலுங்கு இயக்குனர்களும் போட்டிக்கு வரலாம் என செய்திகள் வெளிவந்தது. ஆனால் இப்போது அவர்கள் யாரும் கிடையாது வெங்கட் பிரபு தான் படத்தை இயக்கப் போகிறார் என உறுதிப்பட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Also read: ஜெயிலர் ரிலீசுக்கு முன்பே எகிறிய மார்க்கெட்.. தனுஷை தொடர்ந்து நெல்சனை புக் செய்த டாப் ஹீரோ

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை இந்த விஷயம் தான் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைய இருக்கும் செய்தியை வெங்கட் பிரபு மறைமுகமாக கூறியிருந்தார். ஆனால் இடையில் அவர் நாக சைத்தன்யாவின் கஸ்டடியில் பிஸியானதால் இந்த பேச்சு அப்படியே நின்றது.

தற்போது அந்த படமும் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து இந்த கூட்டணியும் தற்போது தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தான் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: ரஜினியை வைத்து பிசினஸ் செய்த தயாரிப்பாளர்கள்.. சரியான நேரத்தில் உதவிய நண்பன்

அந்த வகையில் ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் முடிவுற்ற நிலையில் விஜய்க்கு அவர்கள் 200 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கின்றனர். இது நிச்சயம் யாரும் எதிர்பார்க்காத விஷயம் தான். ஏனென்றால் இப்போது ரஜினியே 100லிருந்து 120 கோடி வரை தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இதுவே பெரும் தொகையாக பார்க்கப்படும் நிலையில் விஜய் 200 கோடி வாங்குவது அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. சம்பளமே இவ்வளவு என்றால் படத்தின் பட்ஜெட் எப்படி இருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் தளபதி 68 பாலிவுட், ஹாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என இப்போதே கருத்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் விஜய்யின் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்திருப்பது மற்ற நடிகர்களை கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது.

Also read: விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

Trending News