சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வெண்ணிலாவை பார்த்ததும் தத்தி போல் மாறிய விஜய்.. கிடைக்கிற கேப்ல காவிரியை காலி பண்ணும் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவிடம் அக்கறையாக பேசும் விஜய்யை பார்த்து காவேரி வருத்தப்படுகிறார். எங்கே நம்மளை விட்டுவிட்டு வெண்ணிலா பக்கம் போய்விடுவாரோ என்ற பயம் காவேரிக்கு வந்துவிட்டது. அதனால் தர்ம சங்கடமாக பீல் பண்ணும் காவிரி, யாரிடமும் எதுவும் பேசாமல் தனியாக அழுது கொண்டே இருக்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி விஜய்யும் வெண்ணிலா கூடவே இருப்பதினால் காவேரி என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். பிறகு ரூம்குள் தூங்கப்போனால் காவிரியால் தூங்க முடியவில்லை, பிறகு எழுந்து வந்து விஜய் என்ன பண்ணுகிறார் என்று பார்க்க வருகிறார். ஆனால் விஜய்யும் ரூமுக்கு போகும் பொழுது வெண்ணிலா ரூமில் ஒரு சத்தம் கேட்டதால் பயந்து போய் வெண்ணிலா ரூமுக்கு போனார்.

அப்படி போகும்பொழுது வெண்ணிலாவிடம் பயப்படாத நான் இருக்கேன் என்று அக்கரையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதை வெளியில் இருந்து பார்த்த காவேரி தவறாக புரிந்து கொண்டு மொட்டை மாடிக்கு போய் அழுகிறார். காவிரி அழுகிறார் என்று கீழே இருந்து பார்த்த கங்கா, காவிரிக்கு போன் பண்ணி இப்பவே ரொம்ப லேட் ஆகிவிட்டது.

இதற்கு மேலேயும் வெயிட் பண்ணாத, போய் விஜய் கூப்பிட்டு பாரு என்று சொல்கிறார். ஆனால் காவேரி அதை செய்யாமல் போய் தூங்கப் போய் விடுகிறார். பிறகு வெண்ணிலாவை தூங்க வைத்ததும் விஜய், காவேரி இருக்கும் ரூமுக்கு போகிறார். போனதும் நீ என்னை பற்றி தவறாக நினைக்காதே. நான் வெண்ணிலவுக்கு ட்ரீட்மெண்டுக்கு மட்டும்தான் உதவி பண்ணுகிறேன்.

மற்றபடி நீ தான் என்னுடைய மனைவி, காதலி, பொக்கிஷம் என காதலில் சொல்லி முத்தம் கொடுக்கிறார். அடுத்ததாக காலையில் எழுந்து வெண்ணிலாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகும் பொழுது லெட்டர் மூலம் அவருடைய மனதில் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். அந்த லெட்டரை பார்த்து விட்டால் காவேரிக்கு விஜய் பற்றி புரிந்து விடும்.

ஆனால் அதற்குள் ராகினி அந்த லெட்டரை கிழித்து விடுகிறார். இதனால் காவேரி தொடர்ந்து விஜய்யை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் காவிரி கஷ்டப்படும் பொழுது இன்னும் அதை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக கிடைக்கிற கேப்ல ராகினி, விஜய் மற்றும் வெண்ணிலவை சேர்த்து வைத்து பேசி நோகடிக்கிறார். இதற்கு பேசாமல் விஜய் அவருடைய மனசில் என்ன இருக்கிறது என்று காவேரிடம் நேரடியாக தெரியப்படுத்தி விட்டால் இந்த பிரச்சனையிலிருந்து காவிரிக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

Trending News