வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி மிகப்பிரமாண்டமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட பிறகு மீதமுள்ள படப்பிடிப்பை சீக்கிரத்தில் முடித்துவிட்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விஜய், இப்படம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியாகவும், மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

ஏனென்றால் கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த வாரிசு திரைப்படம் இவர் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்கள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் வாரிசு குடும்பப் படமாகவே இருந்தாலும் அந்த படத்தை எடுத்தவர் தெலுங்கு இயக்குனர் என்பதால் தான். அவருடைய கதையை பார்க்கும் பொழுது அங்கு இருக்கும் மக்களுக்கு எப்படி பிடிக்குமோ அதற்க்கு ஏற்ற மாதிரி தான் எடுத்து இருக்கிறாரே தவிர விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.

Also read: டைம் பாஸ்க்கு காதலித்து நடிகையை கழட்டி விட்ட விஜய்.. அப்பா கண்ட்ரோலில் இருந்ததால் பரிபோன காதல் வாழ்க்கை

அதனால் இனிமேல் அந்த தப்பை செய்ய மாட்டார் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் விதமாக தெலுங்கு இயக்குனருடன் மறுபடியும் கூட்டணி வைக்கப் போகிறார். ஏற்கனவே வாரிசு படம் கலவையான விமர்சனங்களை கொடுத்தது. அதுவும் அந்த நேரத்தில் அஜித்தின் துணிவு படத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டு கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

இந்நிலையில் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மறுபடியும் எந்த தைரியத்தில் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி வைக்க இருக்கிறார் என்று தெரியவில்லை. இவரை வைத்து படத்தை இயக்குவதற்கு தமிழ்நாட்டில் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பல முன்னணி இயக்குனர்கள் இருக்கும் நிலையில் இவர் ஏன் தெலுங்கு இயக்குனரை தேடிப் போகிறார் என்று சினிமா பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Also read: தளபதியை வைத்து பப்ளிசிட்டி தேடும் பாலிவுட்.. இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் 69

அதாவது லியோ படத்திற்கு பிறகு இவருடைய 68வது படத்தை முடிவு செய்து இருக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் இயக்க இருக்கிறார். இவர் தெலுங்கில் கடைசியாக பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமே பல நக்கலும் நையாண்டியும் கலந்து கலவையான விமர்சனங்களை தான் கொடுத்தது. தெலுங்கு நடிகருக்கே அந்த நிலைமைனா விஜய்யின் கெதி என்னவாக இருக்கும்.

அத்துடன் விஜய்யின் 68 வது படத்தை தயாரிப்பாளர் ஆர் பி சௌவுத்ரி தயாரிக்கப் போகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. அதாவது லியோ படத்தை ரிலீஸ் செய்த பிறகு. அதற்கு அடுத்து படப்பிடிப்பின் வேலைகளை ஒவ்வொன்றாக ஆரம்பித்து அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

Also read: லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட சன் பிக்சர்ஸ்.. லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்து வளைத்து போட இப்படி ஒரு திட்டமா? 

Trending News