சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

என் கண் முன்னாடியே நிக்காத ஓடிடு.. மொத்த பேரையும் கெடுத்துட்ட, வெளுத்து விட்ட லியோ தாஸ்

Leo-Vijay: ரிலீசுக்கு முன்பு லியோ மீது இருந்த எதிர்பார்ப்பு படம் வெளியான பிறகு சர்ச்சையாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பூகம்பமாக வெடித்த நிலையில் படம் வெளியான பிறகு வந்த வசூல் நிலவரமும் அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. அது தற்போது முடிவுக்கு வந்த நிலையில் மற்றொரு பிரச்சனையும் உருவெடுத்துள்ளது.

அதாவது சில தினங்களுக்கு முன்பு லியோ வெற்றியை கொண்டாடும் வகையில் சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு விஜய்யை தாறுமாறாக புகழ்ந்து பேசினார்கள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு தரமான சம்பவம் நடந்தது. லோகேஷின் நண்பரான ரத்னகுமார் ரஜினியை சீண்டும் வகையில் பேசியது இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ரஜினி சொன்ன காக்கா பருந்து கதைக்கு பதிலடியாக பசிச்சா கீழே வந்து தான் ஆகணும் என அவர் பேசியிருந்தார். விஜய் உள்ளிட்ட மற்ற பிரபலங்கள் அனைவரும் அமைதியாக இருந்த அந்த மேடையில் சில்வண்டு போல் இருக்கும் இவர் உச்ச நடிகர் ரஜினியை பற்றி பேசியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூப்பர் ஸ்டாரின் சாதனையில் துளி அளவு கூட செய்திடாத ரத்னகுமார் இந்த அளவுக்கு பேசியது முழுக்க முழுக்க விஜய் இடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத் தான்.

Also read: விஜய்யை சந்தோஷப்படுத்த பேசிய ஆர்வக்கோளாறு.. லியோ சக்சஸ் மீட்டால் சந்திக்க போகும் 5 பிரச்சனைகள்

அதனாலயே ஐஸ் மலையை தூக்கி வைத்து இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தினார். ஆனால் இது அவருக்கே ஆப்பாக முடிந்தது தான் சோகம். அதாவது அவர் இப்படி பேசுவார் என்று விஜய் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம். இதனால் டென்ஷனான அவர் ரத்னகுமாரை கூப்பிட்டு எதுக்கு அப்படி பேசினீங்க, இங்கிருந்து முதல்ல போங்க என்று கோபமாக பேசியிருக்கிறார்.

அதன் பிறகு விஜய் ரத்தினகுமாரை சந்திக்கவே இல்லை என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பல சந்தேகங்களுக்கும் விடையாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த நிகழ்ச்சியே விஜய்யின் பக்கா ஸ்கிரிப்ட் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் ரத்னகுமார் பேசியதும் சொல்லிக் கொடுத்து தான் என்று கூறப்பட்டது.

ஆனால் இது விஜய்க்கே தெரியாமல் நடந்தது என நிரூபணம் ஆகி இருக்கிறது. இது இப்போது அவருக்கான ஒரு கெட்ட பெயர் ஆகவும் மாறி இருக்கிறது. ஆக மொத்தம் ஆர்வக்கோளாறில் தளபதியை சந்தோஷப்படுத்த நினைத்த ரத்னகுமார் இப்போது இந்த விஷயத்தால் சில பின் விளைவுகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். இதைத்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்கள்.

Also read: லியோ படத்தின் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.? நம்பர் ஒன் யாருன்னு நிரூபித்த முத்துவேல் பாண்டியன்

Trending News