வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கெட்டப் சேஞ்ச் பண்ணாத விஜய்.. ஒரே மாதிரி நடிக்க இதுதான் காரணம்

சினிமாவில் கமல், அஜித் போன்ற நடிகர்கள் படத்திற்காக கெட்டப் சேஞ்ச் பண்ணுவார்கள். சமீபத்தில் கூட துணிவு படத்திற்காக அஜித் நீண்ட தாடி வளர்த்திருந்தார். இதைத்தொடர்ந்து துணிவு படப்பிடிப்பு முடிந்த உடன் ஏகே 62 படத்திற்காக கிளீன் ஷேவ் செய்திருந்தார். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இதே போல் தான் கமலும் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஒவ்வொரு கெட்டப் இருக்கும் கணம் கச்சிதமாக உலகநாயகன் பொருந்துவார். ஆனால் விஜய் எப்போதுமே ஒரே மாதிரியான கெட்டப்பில் தான் நடித்து வருகிறார். இவர் மட்டும் ஏன் வேற எந்த கெட்டப்பும் பண்ணவில்லை என்ற பேச்சு எப்போதுமே இருந்து வருகிறது.

Also Read : உதயநிதி, விஜய்க்கு இடையே மறைமுகமாக ஏற்பட்ட சண்டை.. வாரிசு மேடையில் பதிலடி கொடுக்க நாள் குறித்த இளையதளபதி

ஏனென்றால் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது. எல்லா படத்திலும் ஒரே கெட்டப்புடன் தான் வருகிறார். அவரது ரசிகர்களுக்கும் இது ஒரு வகையில் ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. அவர் வேறு கெட்டப்பில் எப்படி இருப்பார் என்ற சிந்தனையில் ரசிகர்கள் உள்ளனர்.

அதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் விஜய் பதிலளித்துள்ளார். அதாவது சில பேருக்கு கெட்டப் செட் ஆகும், சில பேருக்கு அது செட் ஆகாது. அதுமட்டுமின்றி இன்றுவரை என்னிடம் கதை சொல்லவரும் இயக்குனர்கள் அந்த மாதிரி ஒரு கதையை கூறியது இல்லை.

Also Read : ஓவரா அலைக்கழிக்கும் லோகேஷ்.. தளபதி 67ஆல் குழம்பி போயிருக்கும் விஜய்

அப்படி ஏதாவது இயக்குனர்கள் வந்து என்னிடம் அது போன்ற கதை கூறியிருந்தால் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்க மாட்டேன். அதற்காக முயற்சி செய்திருப்பேன், ஆனால் இதுவரை எனக்கு அதுபோன்ற கதைகள் வந்ததில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு வேலை என்னை பார்த்தால் கெட்டப் சேஞ்ச் பண்ண மாட்டேன் என்று இயக்குனர்களுக்கு தோன்றியிருக்கும் போல என்று விஜய் சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார். வருங்காலத்திலாவது விஜய்க்கு அது போன்ற படங்கள் வருகிறதா என்பதை பார்ப்போம்.

Also Read : விஜய்க்கு சம்பளம் 100 கோடி.. அவரை தூக்கி விட்ட இயக்குனரோ தெருக்கோடி

Trending News