தளபதி விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் வெளியானது.
இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டானது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read : விஜய்யுடன் நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. தளபதி 67க்கு அர்ஜுனை போல் நோ சொன்ன 90ஸ் ஹீரோ
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு சந்தோஷம் இருந்தாலும், ஒரு வகையில் சந்தேகமும் எழுந்துள்ளது. நெருப்பு கொழும்பு உடன் தீ என்ற வார்த்தை அதில் இடம்பெற்றுள்ளது. அதற்கு மேலே சிலுவை இந்த போஸ்டரில் காணப்படுகிறது.
விஜய் நடிக்கும் பெரும்பான்மையான படங்களில் மறைமுகமாக எப்போதுமே சிலுவை இடம் பெறும். அது வாரிசு படத்திலும் தொடர்கிறது. இதனால் விஜய் படத்தின் போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி அடைவதை விட மதத்தை திணிப்பதாக நினைத்த அனைவரும் எரிச்சல் அடைகின்றனர்.
Also Read : 3 வேடங்களில் டாப் ஹீரோக்கள் பின்னி பெடலெடுத்த 6 படங்கள்.. மெர்சலாக்கிய தளபதி விஜய்
இதை எப்படி இயக்குனர் வம்சி ஏற்றுக்கொண்டார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. விஜயின் முந்தைய படங்களில் சிலுவை இடம்பெற்ற நிலையில் கடந்த சில வருடங்களாக அட்லீ, விஜய் கூட்டணியில் வெளியாகும் படங்களிலும் சிலுவை இடம் பெற்றுள்ளது.
இதே போல் தற்போது வம்சியும் இவ்வாறு செய்வதால் விஜய்க்கு இயக்குனர்கள் சரியாக சொம்படிக்கிறார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமின்றி இதை மீடியாக்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாற்றி படத்திற்கு ப்ரமோஷன் செய்து விடுவார்கள்.
![vijay-varisu](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/12/vijay-varisu1.jpg)
Also Read : 3 வேடங்களில் டாப் ஹீரோக்கள் பின்னி பெடலெடுத்த 6 படங்கள்.. மெர்சலாக்கிய தளபதி விஜய்