புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெண்ணிலாவை மொத்தமாக தலைமுழுகி காவிரி மீது அன்பை கொட்டும் விஜய்.. வரப்போகும் புது பிரச்சனை

Mahanadhi Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரிக்கு இடைஞ்சலாக இருந்த நவீனை எப்படியோ கழட்டிவிட்டு யமுனா கழுத்தில் தாலி கட்ட விட்டு தற்போது விஜய் மற்றும் காவிரி நிம்மதியாகிவிட்டார்கள். ஆனால் பாவம் பலியாடாக நவீன் தான் சிக்கி விட்டார். ஆனால் இந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் காவேரி, விஜயுடன் சேர்ந்து வாழ்வதற்கு தயாராகி விட்டார்.

விஜய்யும் இனி எனக்கும் காவிரிக்கும் நடுவில் நவீன் அத்தியாயம் இல்லை என்று முடிவு பண்ணி மொத்த அன்பையும் காட்டும் விதமாக காவிரி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் காவிரியை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி பிரம்மாண்டமான ஏற்பாடுகளை பண்ணி கேக் கட் பண்ணி பல பரிசுகளை கொடுத்து காவிரியை இன்ப அதிர்ச்சியில் தள்ளிவிட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத காவிரி, விஜய்யை முழுமையாக நம்பி இந்த வாழ்க்கை இப்படியே நீடிக்க வேண்டும். ஒப்பந்தத்தின்படி கல்யாணம் முடிந்து விட்டது என்று என்னை அனுப்பி விடக்கூடாது என்று பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். இதனை அடுத்து விஜய்யும், காவிரியை அரவணைத்து உனக்காக நான் இருப்பேன் என்று வாக்குமூலம் கொடுக்கும் அளவிற்கு ரொமான்ஸை காட்டிவிட்டார்.

அந்த வகையில் இனி வெண்ணிலா வந்தா கூட விஜய் கொஞ்சம் கூட அசர மாட்டார் என்பதற்கு ஏற்ப வெண்ணிலாவை மொத்தமாக தலைமுழுகி காவிரியை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார். இது எதுவும் தெரியாத ராகினி, விஜய் காவிரிக்குள் ஒரு பிரச்சனை வரவேண்டும் என்பதற்காக வெண்ணிலாவை நாளா பக்கமும் தேடிக் கொண்டு அலைகிறார்.

தற்போது காவிரி மற்றும் விஜய்க்கு நடுவில் யாருமே வரமாட்டார்கள் என்பதற்கு ஏற்ப இரண்டு பேரும் மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த சூழலில் ராகினி, வெண்ணிலாவை கண்டுபிடித்து விஜய் கண் முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டப் போகிறார். என்ன தான் விஜய் மனதிற்குள் காவேரி இருந்தாலும், வெண்ணிலாவை ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்திருக்கிறார்.

அதிலும் தற்போது வெண்ணிலா நிலமை கொஞ்சம் மோசமாக இருப்பதால் இந்த நேரத்தில் விஜய், வெண்ணிலாவை கைவிடும் அளவிற்கு முடிவெடுக்க மாட்டார். இதனால் ரெண்டும் கெட்டா நிலைமையில் இருக்கும் விஜய், வெண்ணிலாவுக்கு ஆறுதலாக நிற்கப் போகிறார். இதை பார்த்து காவேரி, விஜய் மனதிற்குள் நாம் இல்லை வெண்ணிலா தான் இருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு விலகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Trending News