திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலகிருஷ்ணாவாக மாறப்போகும் விஜய்.. பணத்தாலேயே அடிச்சு வாய்ப்பு வாங்கிய தயாரிப்பாளர்

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த இயக்குனருடன் இணைய போகிறார் என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.

அந்த வகையில் அவர் அடுத்ததாக அட்லி உள்ளிட்ட சில இயக்குனர்களுடன் பணிபுரிய போவதாக ஒரு தகவலும் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது அவர் தெலுங்கு இயக்குனர் ஒருவருடன் தான் கைகோர்க்க இருக்கிறாராம். இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாகவும் இருக்கிறது.

Also read: சிவாஜியை பாலோ செய்த விஜய்.. இயக்குனரையே ஆச்சரியப்படுத்திய சம்பவம்

அதாவது பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை இயக்கிய கோபிசந்த் விஜய்யிடம் ஒரு கதையை கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார். இந்த தகவல் தான் தற்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால் விஜய், அட்லி கூட்டணி தான் அடுத்ததாக இணையும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறியது.

ஆனால் இப்போது அவர் அக்கடதேச இயக்குனருக்கு ஓகே சொல்லி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்குப் பின்னால் சில காரணங்களும் இருக்கிறது. அதாவது அட்லி இப்போது ஜவான் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். அப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற ஒரு சூழ்நிலையும் இருக்கிறது.

Also read: லாரன்ஸ் பிள்ளைகளுக்கு விஜய் செய்யும் உதவி.. விரைவில் இணைய உள்ள கூட்டணி

அதனால் அவருக்காக காத்திருக்கும் நேரத்தில் அடுத்த படத்தை முடித்து விடலாம் என்று விஜய் முடிவு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மற்றொரு வியக்க வைக்கும் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அந்த திரைப்படத்தை மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் தயாரிக்க இருக்கிறது.

புஷ்பா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த நிறுவனம் விஜய்யிடம் பல கோடி சம்பளம் தருவதாக டீல் பேசி இருக்கிறது. அந்த வகையில் 135 கோடி ரூபாய் சம்பளத்தை ஒரே பேமண்டில் அவர்கள் கொடுத்திருக்கிறார்களாம். அதன் காரணமாகவே விஜய் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவரை தமிழ்நாட்டின் பாலகிருஷ்ணாவாகவும் மாற்ற வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

Also read: 50வது படத்தை தந்திரமாக லாக் செய்த விஜய் சேதுபதி.. தூக்கி விட்ட இயக்குனரை கழட்டிவிட்ட சோகம்

Trending News