வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினியை பின்பற்றி வளர்ந்து வரும் விஜய், அஜித்.. வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு, துணிவு பட பிரமோஷன்

உலக அளவில் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற பல இடங்களிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். அதேபோன்றுதான் இப்போது மாஸ் நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டாரை பின்பற்றி வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு ஆசைப்படுகிறார் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு தற்போது நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவிலும் சரத்குமார், தில் ராஜூ ஆகியோர் அவரை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்கள். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வாரிசு படத்தின் ப்ரோமோஷன் கூட சூப்பர் ஸ்டார் பாணியில் தான் அமைந்திருக்கிறது.

Also read: சுய லாபத்திற்காக விஜய் கூட்டிய கூட்டம்.. தனி பாதையை உருவாக்கும் சூர்யாவை பார்த்து கத்துக்கோங்க

அதாவது வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது அப்படியே ரஜினியின் பேட்ட படத்தின் போஸ்டரின் காப்பி போல் இருந்தது. இதை ரஜினி ரசிகர்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இந்நிலையில் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு கூட ரஜினி இதற்கு முன்பு பேசியது தான்.

அதாவது விஜய் அந்த விழாவில் எனக்கு போட்டி நான்தான் என்று பேசி இருந்தார். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை பல வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் கூறி இருந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரு விழாவில் கலந்து கொண்ட ரஜினி எனக்கு எதிரி என்றால் அது நானாக மட்டும் தான் இருக்க முடியும்.

Also read: யுனிவர்சல் கூட்டணிக்காக அஜித்தை டீலில் விட்ட த்ரிஷா.. இயக்குனர் மேல் இருக்கும் அவநம்பிக்கை

அதேபோன்று எனக்கு நண்பனும் நான்தான். என்னுடைய படங்கள் தான் எனக்கு போட்டி, மற்ற நடிகர்களோ அல்லது அவர்களுடைய படங்களோ எனக்கு போட்டி கிடையாது என்று பேசியிருந்தார். அதே பாணியில்தான் இப்போது விஜய்யும் பேசி இருக்கிறார்கள். இதைத்தான் ரஜினி ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோன்று இப்போது அஜித்தின் துணிவு பட பிரமோஷன் கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது.

2.0 திரைப்பட பிரமோஷன்

rajini--movie-cinemapettai
rajini–movie-cinemapettai

அதாவது துணிவு படத்தின் டிரைலர் எப்போது என்ற ஒரு வீடியோ வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கிறது. அதில் பாராசூட் மூலம் ஒருவர் துணிவு படத்தின் டிரைலர் அறிவிப்பு போஸ்டரை விளம்பரப்படுத்தி இருக்கிறார். இதேபோன்று ஏற்கனவே ரஜினியின் நடிப்பில் வெளிவந்த 2.0 திரைப்பட பிரமோஷன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த வகையில் ரஜினியை பின்பற்றி பிரமோஷன் செய்து வரும் வாரிசு மற்றும் துணிவு பற்றி தான் இப்போது பலரும் பேசி வருகின்றனர். மேலும் சூப்பர் ஸ்டார் இல்லாமல் விஜய், அஜித் கிடையாது என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

துணிவு பட பிரமோஷன்

thunivu-cinemapettai
thunivu-cinemapettai

Also read: வாய்ப்பு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ளாத இயக்குனர்.. கடுப்பான ரஜினி, துரத்தி விட்ட லைக்கா

Trending News