செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தலைகணத்தில் இருக்கும் விஜய்.. எங்களுக்கு தளபதியே தேவையில்லை என்று முடிவெடுத்த ரசிகர்கள்.!

தமிழ்நாட்டில் தற்போது முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சம்பளத்திலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி, இவர்தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு என்று தாறுமாறான ரசிகர்கள் இவர் பின்னால் செல்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இவர்களை வைத்துதான் இவர் இன்று அரசியல் என்ற ஆபத்தான இடத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்.

என்னதான் விஜய் பெரிய நடிகராக இருந்தாலும் இவரது குணங்களை மட்டும் மாறாமல் இன்றுவரை அப்படியே இருக்கிறார். ரசிகர்களை பார்த்தால் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கையசைத்து காட்டுவது, போட்டோ எடுப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும். ஆனால் விஜய் அப்போது முதல் இப்போது வரை ரசிகர்களைப் பார்த்தால் ஓடி விடுவார் இல்லை பின் பக்கமாக சென்று விடுவார் அல்லது பவுன்சர்களை வைத்து தப்பித்து விடுவார்.

Also Read : உதயநிதியால் பெரும் சிக்கலை சந்தித்த அஜித், விஜய்.. வேறு வழியில்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்

தற்போது வாரிசு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அந்த இடத்திற்கு அவரை பார்க்க சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில் அசிங்கப்பட்ட ரசிகர்கள் நாங்கள் எதற்காக இங்கு வருகிறோம் தளபதிக்காக மட்டுமே அவர் ஏன் எங்களுக்கு தூரத்திலிருந்து கை காட்டினால் கூட நாங்கள் பார்த்துவிட்டு சென்று விடுவோம். அதை செய்யாமல் எங்களை இப்படி அசிங்கப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

மற்ற நடிகர்கள் யார் வந்தாலும் அவர்களை எளிதாக ரசிகர்கள் பார்க்கிறார்கள். தளபதி நடிக்கும் படப்பிடிப்பில் மட்டும் எங்களுக்கு இப்படி நடக்கிறது இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனிமேல் இப்படி நடந்தால் எங்களுக்கு தளபதி தேவையில்லை என்ற வார்த்தையை கூறிவிட்டனர். இந்த வார்த்தையை யாரும் எதிர்பார்க்கவில்லை அந்த அளவிற்கு வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Also Read : எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

இதேபோல் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் உண்டு கூடியதால் அவர்களை சந்திக்காமல் தப்பித்து ஓடிய விஜய் பின்னர் வேறு வழியின்றி அவர்களிடம் ஒரு பொதுவான இடத்தில் செல்பி எடுத்து அந்த போட்டோவைப் பகிர்ந்தார். இன்றும் இதேபோல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை விஜய் பார்ப்பாரா, மாட்டாரா எதற்காக இப்படி ஒரு விஷயம் நடக்க வேண்டும்.

மற்றவர்கள் செய்தால் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறாது. விஜய் செய்யும் போது மட்டும் பிரச்சினையாக மாறுவதற்கு காரணம் அவர் உச்ச நடிகராக இருப்பதால் மட்டுமே மற்றும் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இந்த பிரச்சினை எழுகிறது. இதனை சரிசெய்ய விஜய் கூடிய விரைவில் முயற்சி எடுக்க வேண்டும் இல்லையென்றால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை.

Also Read : அன்பு தம்பிக்காக எல்லாத்தையும் மறந்த விஜய்.. காற்றில் பறக்கும் கொள்கைகள்

Trending News