திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நடிப்பை விட்டு விலகப் போகும் விஜய்.. அதிர்ச்சியளிக்கும் விஷயத்தைச் சொன்ன பிரபலம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் ரசிகர்கள் தான். அவரது ரசிகர்கள் படம் எப்படி இருந்தாலும் அதை வெற்றி பெறச் செய்து விடுவார்கள்.

இந்நிலையில் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் பிரியமுடன் போன்ற பல படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் மில்டன். இவர் ஒரு பேட்டியில் விஜய் பற்றி பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்று தான் இன்று வரை விஜய்யின் நிறைவேறாத ஆசை. அதாவது 2000ம் ஆண்டிற்கு பிறகு நான் நடிப்பதை விட்டுவிடப் போகிறேன் என விஜய் கூறியுள்ளார்.

விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட படங்களை இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதை யோசித்து கூட பார்க்க முடியாத அளவிற்கு தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ளார் என விஜய்மில்டன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். விஜய்க்கு இப்படி ஒரு ஆசை இருந்ததா என அவரது ரசிகர்கள் வியந்துள்ளனர்.

ஆனால் விஜய்யின் இந்த நிறைவேறாத ஆசையை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கன்னடா சென்று சினிமா இயக்குவது தொடர்பான படிப்பை முடித்துள்ளார். மேலும் படம் இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் சஞ்சய் இயக்கத்தில் கண்டிப்பாக படம் வர அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் சமீபத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய் இடம் கதை சொல்வதற்காக விஜய் வீட்டுக்கு சென்று உள்ளார் என்ற தகவலை விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை என சஞ்சய் மறுத்துள்ளாராம். இதனால் அவர் நடிப்பை காட்டிலும் இயக்கத்தில் தான் முழு வீச்சில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News