வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025

ஹேர் ஸ்டைல் விஷயத்தில் பெரிய அப்செட்டில் இருக்கும் விஜய்.. அசிங்கத்தை துடைக்க போகும் தளபதி

Vijay Hairstyle: விஜய் 49 வயதிலும் இளமையும் அழகும் கொஞ்சம் கூட குறையாமல் துள்ளலாகவே இருந்து வருகிறார். இதில் ஒவ்வொரு படத்திற்கு ஏற்ற மாதிரி கெட்டப்புகளை மாற்றி நடிப்பது வழக்கம் தான். அதிலும் அவருடைய ஹேர் ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு ரொம்பவே மெனக்கெடு செய்யக்கூடியவர்.

அப்படிப்பட்டவரை தற்போது பார்க்கும் பொழுது கொஞ்சம் கேலியும் கிண்டலும் பண்ணும் அளவிற்கு தான் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். அதற்கு காரணம் வெங்கட் பிரபு இயக்கம் கோட் படத்தில் அப்பா மகன் என இரண்டு கேரக்டர்களை கொண்டு வருவதால் தான்.

இதில் மகன் இளம் வயது போல் இருக்க வேண்டும் என்பதால் தாடி மற்றும் மீசை இல்லாமல் முகம் முழுவதும் சேவ் பண்ணி இருக்கிறார். இந்த சமயத்தில் அரசியலில் இறங்கியதால் பொது இடங்களில் மக்களை சந்திக்கும் பொழுது இப்ப இருக்கிற தோற்றத்துடனே சந்தித்து வருகிறார்.

தோற்றத்தை மாற்ற போகும் தளபதி

இதனால் பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே ஹேர் ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஜய், இப்பொழுது இருக்கும் ஹேர் ஸ்டைல் அவருக்கே கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாததால் கோட் படம் முடியும் வரை அப்படித்தான் இருக்க வேண்டும் சூழல் ஏற்பட்டு விட்டது.

தற்போது எப்பொழுதுதான் கோட் படப்பிடிப்பு முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் படப்பிடிப்பை முடித்த கையோடு லண்டனுக்கு சென்று பெஸ்ட் ஹேர் ஸ்டைலை மாற்றப் போகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இப்பொழுது செய்துவிட்டார்.

மேலும் அடுத்த கட்ட முயற்சியாக அரசியலில் இறங்குவதால் அதற்கான தோற்றத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பெஸ்ட் ஹேர் ஸ்டைலிஷ் இடம் அரசியல்வாதிகளுக்கு தகுந்த மாதிரி இருக்கும் ஹேர் ஸ்டைலை வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் கோட் படப்பிடிப்பை முடித்துவிட்டு இதுவரை ஏற்பட்ட அசிங்கத்தை துடைக்கும் விதமாக ஸ்டைலிஷ் ஆன ஹேர் ஸ்டைலுடன் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும், பொறுப்பான அரசியல்வாதி மாதிரி இருக்கக்கூடிய தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு ஜொலிக்கப் போகிறார்.

Trending News