ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அரசியல் பிரவேசத்தை வலுவாக பதித்த விஜய்.. ஸ்டாலின் இல்லாத நேரத்தில் ஒதுக்கிய 2 கோடி

அண்மை காலமாகவே விஜய்யின் நடவடிக்கைகள் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஒருசேர அளித்துக் கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அவரின் தளபதி 68 அறிவிப்பும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்தது.

இது ஒரு புறம் இருந்தாலும் அவருடைய அரசியல் வருகைக்கான அறிகுறிகள் தொடங்கி விட்டதா என்ற கேள்வியும் சில காரணங்களால் முன் வைக்கப்படுகிறது. அதாவது இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக நல உதவிகள் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

Also read: அரசியல் ஆசையால் சினிமாவில் பேரை தொலைத்த 4 நடிகர்கள்.. ரீ என்ட்ரி கொடுக்கும் சரத்குமார்

அதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலும் நிர்வாகிகளால் தயார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க இருக்கிறார்.

அதன்படி கிட்டத்தட்ட 1500 மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து இந்த பரிசுத்தொகையை கொடுக்க இருக்கிறார். அதற்காக தற்போது 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

Also read: மாமன்னன் படம் ஓட வாய்ப்பே இல்ல.. இப்பவே உதயநிதி, வடிவேலு தலையில் இடியை இறங்கிய பிரபலம்

இதுவே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த தகவலும் அவருடைய அரசியல் பிரவேசத்திற்கான ஒரு நங்கூரமாக அமைந்துள்ளது. இதன் மூலம் அவர் தன்னுடைய அரசியல் வருகையை வலுவாக பதித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதை ரசிகர்கள் உட்பட பொதுமக்களும் ஆர்வத்துடன் வரவேற்கின்றனர்.

மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் இல்லாத இந்த நேரத்தில் விஜய் இவ்வளவு அதிரடி வேலைகளை செய்வது ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களின் மூலம் விஜய் தன்னுடைய அரசியல் என்ட்ரியை மக்களுக்கு அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் அர்ஜுன்.. லியோ படத்தில் மொத்தமாக மாறிய சம்பவம்

Trending News