தளபதி விஜயின் படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என பல புதுமுக இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், விஷால் போன்ற நடிகர்களின் படங்களை இயக்கிய லிங்குசாமி விஜய்க்காக பல கதைகளை தயார் செய்து வைத்து இருந்தார்.
மேலும் இந்த படத்தில் விஜய் நடிக்க விருப்பம் இருந்தும் நூலிலையில் அதை தவற விட்டுள்ளார். அதாவது லிங்குசாமியின் இரண்டாவது படமான ரன் படத்திலே விஜய் தான் நடிக்க வேண்டியது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக மாதவன் அப்படத்தில் நடித்திருந்தார்.
Also Read :அஜித்தால் அந்த ஒரு விசியத்தில் விஜய்யை நெருங்க கூட முடியாது.. சர்ச்சையை ஏற்படுத்திய சினிமா பிரபலம்
இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, வேட்டை என விஜய்க்காக எழுதிய கதையிலும் அவரால் நடிக்க முடியாமல் போனது. மேலும் இப்போது வரை லிங்குசாமி, விஜய் கூட்டணி ஒரு படம் கூட அமையவில்லை. ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக விஜய் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் லிங்குசாமி உள்ளார்.
ஆனால் தற்போது விஜயின் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. தொடர்ந்து கமர்சியல் படங்கள் கொடுத்து ஹிட் அடித்து வருகிறார். மேலும் இளம் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் தான் விஜய் ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏனென்றால் இப்போது உள்ள ட்ரெண்டிற்கு ஏற்றவாறு படத்தை கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.
Also Read :முதல் முறையாக ரஜினியின் கோட்டையில் நுழையும் விஜய்.. போஸ்டரை மாஸாக ரிலீஸ் செய்த லோகேஷ்
அதனால் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், வம்சி போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். ஆனால் இதுவரை ஆக்சன் படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது வித்தியாச முயற்சியாக சென்டிமென்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆக்சன் காட்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது வாரிசு படத்தின் போஸ்டர் வெளியான போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. ஆகையால் இப்போதையுள்ள காலகட்டத்தில் லிங்குசாமி இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என்பது கேள்விக்குறி தான்.
Also Read :விஜய் பட பாடலால் ஆட்டிடியூட் மாறிய விபரீதம்.. தலைகணத்தில் தலைவிரித்து ஆடும் மாஸ்டர்