புதன்கிழமை, ஜனவரி 15, 2025

GOAT மொத்தம் யூனிட்டையும் படாதபாடு படுத்தும் விஜய்.. அடிச்சு புரண்டு பரந்து வரும் வெங்கட் பிரபு டீம்

Vijay In Goat: விஜய் எந்த அளவுக்கு சினிமாவை முழுமூச்சாக எடுத்துக் கொண்டு ஆட்ட நாயகனாக ஜெயித்திருக்கிறாரோ, அதே மாதிரி தற்போது அரசியலிலும் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இருக்கிறார். அதன் வாயிலாக நடிப்புக்கு பிரேக் விடப் போகிறார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படப்பிடிப்புக்கு அடுத்து கடைசியாக ஒரு படம் நடிக்கப் போகிறார். அதனால் சீக்கிரத்தில் கோட் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார். போதாதருக்கு வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு போடும் நாள் நெருங்கி விட்டது.

அதனால் விஜய், கோட் பட குழுவிடம் சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்து விடுங்கள் என்று படாத பாடு படுத்தி வருகிறார். தற்போது மொத்த டீமும் ரஷ்யாவில் இருக்கிறார்கள். அங்கே இறுதி கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. அதனால் எலக்சன் வருவதற்குள் படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்று வெங்கட் பிரபுவுக்கு ஆர்டர் போட்டு இருக்கிறார்.

பூசணிக்காய் உடைக்கும் நேரம் வந்தாச்சு

அதன்படி வெங்கட் பிரபு 99% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில வேலைகள் மட்டும் தான் இருக்கிறது அதையும் சீக்கிரத்தில் முடித்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் கோட்படத்தின் மொத்த டீமும் வருகிற 17ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு பறந்து வரப் போகிறார்கள்.

அடுத்ததாக இந்த தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அனைத்தும் வெளிவந்த பிறகு ஜூன் மாத கடைசியில் விஜய், எச் வினோத்துடன் தளபதி 69 படத்திற்காக பிள்ளையார் சுழி போட போகிறார். இப்படத்தையும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஒரு திட்டத்துடன் நகர்ந்து வருகிறார். அதற்கு அடுத்து முழுக்க முழுக்க அரசியல் வேலைகளில் ஈடுபடப் போகிறார்

Trending News