புதன்கிழமை, ஜனவரி 15, 2025

200 கோடி சம்பளம் வாங்கிட்டு டீலில் விட்ட விஜய்.. ஒரு அடி எடுத்து வச்சா பத்து அடி சறுக்குது

Vijay in Leo Movie: எப்பொழுது விஜய் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார் என்று தெரிந்ததோ அப்பொழுதே இவருடைய படத்திற்கும் ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனை பூகம்பமாக வெடித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் இதையெல்லாம் சரி கட்டி எப்படியும் படத்தை நல்லபடியாக ரிலீஸ் செய்து அதில் வெற்றி பார்த்து வசூல் மன்னனாக வேட்டையாடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடித்து முடித்திருக்கும் லியோ படத்திற்கும் பிரச்சனை எக்கச்சக்கமாக வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் லியோ படத்திற்கான ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு இடம், தேதி எல்லாம் குறித்து கிட்டத்தட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்திருந்தார்கள். ஆனால் அதை நடத்த முடியாத அளவிற்கு பல சப்பக்கட்டுகளை கட்டி ரத்து செய்து விட்டார்கள்.

Also read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்த.. விஜய்க்கு ஜோடியான மீனாட்சி சவுத்ரி, காரணம் இதுதான்

அடுத்ததாக இப்படத்தில் ஆடிய டான்ஸ் மாஸ்டர்களுக்கு சரியான விதத்தில் சம்பளம் போகவில்லை என்ற குற்றச்சாட்டு இப்படத்தின் தயாரிப்பாளர் மீது எழுந்து வந்தது. ஆனால் அவர் இதுதான் விதிமுறை. அதை நாங்கள் சரியாக பாலோ பண்ணி வருகிறோம். அதனால் எங்களை இந்த மாதிரி யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று திட்டவட்டமாக அறிக்கை விட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மறுபடியும் ஒரு பிரச்சனை வெடித்து இருக்கிறது. அதாவது லியோ படம் முழுக்க முழுக்க விஜய்க்காகவும்m இயக்குனர் லோகேஷின் கதைக்காகவும் தான் ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்க்கு இப்படத்தில் அதிகபட்சமாக 200 கோடி சம்பளத்தை கொடுத்திருக்கிறார்.

Also read: வெங்கட் பிரபு அண்ட் கோ-வை வெட்டிவிட்ட விஜய்.. தளபதி 68 காக செய்யும் தியாகம்

இதனால் மற்றவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது விஜய்க்கு அதிகமாக கொடுத்ததால் இதில் நடித்த மற்ற ஆர்ட்டிஸ்ட்களிடம் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட பாதிக்குப் பாதியாக தான் குறைத்து பேசி இருக்கிறார். அந்த வகையில் விஜய்யை தவிர மற்ற அனைவருக்கும் சம்பளம் திருப்தியாக அமையவில்லை. இதை பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டதற்கு இது விஜய் படம் அதனால் அவருக்கு மட்டும் தான் அதிகப்படியான சம்பளம் என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தைப் பற்றி விஜய் எதையுமே வாய் திறந்து பேசாமல் அவருக்கு தேவையான 200 கோடி கிடைத்ததும் மற்றவர்களை டீலில் விட்டு வேடிக்கை பார்க்கிறார். அதனால் தற்போது மற்ற ஆர்டிஸ்ட்டுகள் தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.  ஒரு அடி எடுத்து வச்சா தொடர்ந்து சறுக்கிகொண்டே போகுதே என்று தயாரிப்பாளர் விழிப்பிதுங்கி நிற்கிறார்.

Also read: அரசியலால் சினிமாவுக்கு வைக்கும் முற்றுப்புள்ளி.. விஜய் கடைசியாக நடிக்கும் படம்

Trending News