செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பெரும் புள்ளிகளை ஓரங்கட்டி விழாவை தெறிக்கவிட்ட விஜய்.. ஆடியோ பங்ஷனை பார்த்து மிரண்ட துணிவு

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த நிகழ்ச்சி பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும் புள்ளிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பட குழுவினரை தவிர பெரிய நடிகர்கள் யாரும் அதில் பங்கேற்கவில்லை. தயாரிப்பாளர் தில் ராஜு கூட தெலுங்கு திரை உலகின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்க நினைத்திருக்கிறார். அதேபோல தமிழிலும் சில பிரபலங்களின் பெயரை கூறியிருக்கிறார். ஆனால் விஜய் தான் பெரிய பிரபலங்கள் யாரும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

Also read: பாட்டு மட்டும் இல்ல போஸ்டரும் காப்பி தான்.. தமன் வெளியிட்ட போஸ்டரால் ரத்தகளரியான சோசியல் மீடியா

மேலும் நான் தான் விழாவின் நாயகன், பெரிய பிரபலங்களை கூப்பிட்டு நிகழ்ச்சியை நடத்தினால் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் கிடைக்கும். ஆனால் அவர்களால் தான் படத்திற்கு பிரமோஷன் கிடைத்தது என்று ஒரு பேச்சு வந்துவிடும். அதனால் வேறு யாரும் வேண்டாம் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாராம். அதன் காரணமாகவே தில் ராஜூ ஏற்பாடு செய்திருந்த விஷயங்கள் அனைத்தையும் கைவிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் விழாவில் விஜய்யின் பேச்சு கூட சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் எனக்கு போட்டி நான் மட்டுமே வேறு யாரும் நல்ல என்று அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இது சில உள்ளர்த்தங்களுடன் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது துணிவு திரைப்படம் போட்டிக்கு வந்திருப்பது தான் இவை அனைத்திற்கும் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Also read: வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு டிரெய்லர்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

ஏனென்றால் இந்த வருடம் ஏற்கனவே விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கே ஜி எஃப் 2 படத்துடன் மோதி சில பல விமர்சனங்களை பெற்றது. அதனால் யாரும் வாரிசு படத்திற்கு போட்டிக்கு வரக்கூடாது என முன்கூட்டியே ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ஆனால் துணிவு திரைப்படமும் அதே பொங்கலை குறி வைத்து வெளியாகும் என வெளிவந்த அறிவிப்பு விஜய்யை கடும் அப்செட் ஆக்கியதாம். அது மட்டுமல்லாமல் இரு படங்களின் பாடல் வரிகளும் பதிலடி தரும் வகையில் அமைந்திருக்கிறது.

இதையெல்லாம் பார்த்துதான் விஜய் ஒரு முடிவு செய்து இருக்கிறார். அதாவது ரசிகர்களால் மட்டுமே படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்று யோசித்த அவர் அதைக்கேற்றவாறு வாரிசு ஆடியோ பங்க்ஷனில் பேசி அரங்கத்தையே அதிர விட்டுள்ளார். அது இப்போது பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த கோலாகலமான விழாவை பார்த்து இப்போது துணிவு படகுழுவே மிரண்டு போய் இருக்கிறதாம். பதிலுக்கு அவர்களும் பயங்கர பிரமோஷன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.

Also read: உங்க பங்ஷனால் போலீசுக்கு தான் தலைவலி.. ரசிகர்கள் செய்த வேலையால் தில் ராஜிக்கு வந்த நெருக்கடி

Trending News