திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

மகாநதி சீரியலில் சர்ப்ரைஸ் பண்ண நினைத்த விஜய்க்கு விழுந்த அடி.. காதலை சொல்ல முடியாமல் தத்தளிக்கும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஒரு வருட கல்யாண ஒப்பந்தத்தின்படி விஜய் காவேரி கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் இருவரும் பழகிய நாட்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் காதலை வெளிப்படுத்தாமல் இருவரும் கண்ணாமூச்சி ஆடியதற்கான விளைவு தான் தற்போது காவேரி மற்றும் விஜய் பிரிவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

அதாவது விஜய் ஏற்கனவே வெண்ணிலவை காதலித்திருந்தாலும் எப்பொழுது காவிரியுடன் அவருடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தரோ, அப்பொழுதே முழு மனதுடன் காவிரியே தன்னுடைய மனைவியாகவும் காதலியாகவும் ஏற்றுக் கொண்டார். அதே மாதிரி விஜய்யுடன் பழகிய கொஞ்ச நாளிலே காவிரி மனசிலும் விஜய் குடி புகுந்து விட்டார்.

ஆனால் இருவரும் சொல்லாமல் இருந்த அந்த தருணத்தில் வெண்ணிலா வீட்டுக்குள் புகுந்ததால் ஏகப்பட்ட குழப்பங்களும் பிரச்சினைகளும் சந்திக்கும்படி ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் செய்த ஒப்பந்த கல்யாணம் நவீனுக்கு மட்டும் தெரிந்ததால் யமுனாவை கல்யாணம் பண்ணுவதற்கு முன் எப்படியாவது காவேரி நம்முடன் சேர்ந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் டைரியில் எழுதி வைத்திருந்தார்.

அதை பார்த்து யமுனா, நவீனிடம் சண்டை போட்டு பிரச்சினை பண்ணிய பொழுது நடந்த திருமணத்தைப் பற்றி நவீன் யமுனாவிடம் சொல்லிவிட்டார். உடனே யமுனா, அக்காவின் கல்யாண வாழ்க்கை எந்த மாதிரி இருக்கிறது என்பதை குடும்பத்தில் இருப்பவர்களிடம் வந்து சொல்லிவிட்டார். இதை கேட்டதும் காவேரி குடும்பம் அதிர்ச்சியாகிய நிலையில் விஜய்யிடம் நியாயம் கேட்க போய்விட்டார்கள்.

அப்பொழுது காவேரி, உண்மையை சொல்லும் விதமாக நர்மதாவின் ஆபரேஷனுக்காக விஜய் சொன்ன ஒப்பந்த கல்யாணத்திற்கு நான் சம்மதம் தெரிவித்து விட்டேன் என்று கூறி விடுகிறார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த குமரன், நவீனை அடித்து விட்டார். அத்துடன் இந்த மாதிரி ஒரு மனுசனுடன் என்னுடைய மகள் வாழவே வேண்டாம் என்று காவிரியை கூட்டிட்டு போய்விடுகிறார்கள். தற்போது சொல்லாமல் இருந்த காதலுக்கு கிடைக்கும் தண்டனையாக இருவரும் பிரியும்படி அமைந்துவிட்டது.

இதுல வேற விஜய் ஒப்பந்த கல்யாண பத்திரத்தை கிழித்து விட்டு காவிரியை MD ஆக்க வேண்டும் என்று சர்ப்ரைஸ் பண்ணுவதற்கு பிளான் பண்ணி வைத்திருந்தார். ஆனால் எல்லாமே போய்விட்டது என்பதற்கு ஏற்ப காவேரி மற்றும் விஜய் நடுவில் விரிசல் வந்துவிட்டது. இதனால் காவேரி அவருடைய காதலை சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார். ஆனால் இதையெல்லாம் சரி செய்யும் விதமாக காவேரி அம்மாவாக போகிறார். அதன்பிறகு யாரு நினைத்தாலும் காவேரி மற்றும் விஜயை பிரிக்க முடியாது.

Trending News