வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புஸ்ஸி ஆனந்த் செய்த வேலையால் அசிங்கப்பட்ட விஜய்.. கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தளபதி

Vijay: மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் மிகவும் பாதிப்படைந்து தங்கும் இடம், உணவு இல்லாமல் நிலைகுலைந்து பெரும் அவஸ்தைக்கு ஆளாகி இருந்தார்கள். இதனை சரி செய்யும் பொருட்டாக பல இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் சென்னைக்கு வந்து அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தார்கள். ஆனால் இங்கு இருந்து கொண்டு பல பிரபலங்களும் எனக்கென என்று கமுக்கமாக இருந்து விட்டார்கள்.

இதில் முக்கியமாக அரசியலுக்கு வந்து நிச்சயமாக தமிழ்நாட்டை மாத்தி மக்களுக்கு ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்துவேன் என்று களம் இறங்கப் போகும் விஜய்.  எங்க நல்லது நடந்தாலும் அங்க நம்ம பசங்க தான் முதல்ல இருக்கணும் என்று மேடையில் கூவி கூவி தளபதி விஜய் லியோ சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை சொன்னதோடு சரி, இந்த மிக்ஜாம் புயலுக்கு 48 மணி நேரம் கழித்து தான் ட்விட்டர் பக்கத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்களை மீட்டெடுக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்க சார்பில் இருந்து உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறி “கைகோர்ப்பம் துயர்துடைப்போம்” என்று பதிவை போட்டிருந்தார். அதற்கு அடுத்த தான் விஜய்யின் லெஃப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்ட் ஆக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் களத்திலேயே இறங்க ஆரம்பித்தார்.

Also read: ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

அதுவும் உதவி செய்கிறேன் என்ற பெயரில் விஜய் பெயரை அசிங்கப்படுத்தும் அளவிற்கு தான் புஸ்ஸி ஆனந்த் செயல்கள் இருந்தது. அதாவது உதவி பண்ணுகிற இடத்தில் எல்லாம் விஜய் புகைப்படத்தை வைத்து அனைவருக்கும் தெரியும் படியாக அங்கேயும் இங்கேயும் காட்டிக் கொண்டு வந்ததெல்லாம் பெரிய காமெடியாக தான் இருந்தது.

இதே மாதிரி இவர்கள் தொடர்ந்து இனி செய்தால் விஜய் அரசியல் வாழ்க்கை காமெடியாகவே போய்விடும். இதை தெரிந்து கொண்ட விஜய் உஷாராக வேண்டும் என்பதற்காக புஸ்ஸி ஆனந்தை கூப்பிட்டு லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். அதாவது எந்த நோக்கத்திற்காக மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னேனோ, அதை புரிந்து கொள்ளாமல் ஏன் போட்டோவை கையில வச்சிக்கிட்டு சுத்துறீங்க, பாக்கவே கேவலமாக இருக்கிறது என்று விஜய் கூறியிருக்கிறார்.

மேற்கொண்டு இதே மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தீங்கனா நீங்க யாரும் என்கூட இருக்க முடியாது என்று காரராக விஜய் கூறிவிட்டார். அதனால் இனிமேல் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் யாரும் விஜய்யின் போட்டோவை இந்த மாதிரி செயல்களுக்கு யூஸ் பண்ண மாட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் சட்டையில் விஜய் பேட்ச் மட்டும் போட்டுக் கொள்வார்கள்.

Also read: பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் விஜய்யின் உடன்பிறப்பு.. 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தோல்வி இயக்குனருடன் கூட்டணியா.?

Trending News