திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அரசியலில் முதல் தகுதியிலேயே அவுட் ஆன விஜய்.. சூழ்ச்சி தெரியாமல் சிக்கும் தளபதி

Vijay: அரசியலைப் பற்றி படிச்சிட்டு வருபவர்களை விட சினிமாவில் நடிச்சிட்டு வருபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். காலங்காலமாக சினிமாவில் இருந்து யாராவது ஒரு பிரபலம் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் சப்போர்ட் வைத்து வந்து விடுகிறார்கள். அந்த வகையில் யாராவது ஒருவர் மூலம் தமிழ் நாட்டிற்கு ஒரு மாற்றம் ஏற்பட்டு விடாதா என்ற ஆசையில் மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

மேலும் சினிமாவில் ஆட்டநாயகனாகவும், வசூல் மன்னனாகவும் வெற்றி பெற்று வரும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மூலம் அரசியலுக்குள் வரப்போகிறார். இவருடைய வருகை பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்து இருந்தாலும், இன்னொரு பக்கம் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால் நிறைய தகுதிகள் இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது.

அதாவது அரசியல்வாதிக்கு முதல் தகுதியே கிடைக்கிற கேப்பில் எல்லாம் நன்றாக பேச வேண்டும். உண்மையோ பொய்யோ முதலில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதை புரிந்து அதற்கான விஷயங்களை சேகரித்து அதில் நச்சென்று பதில் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் விஜய்க்கு தகுதியை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: விஜய்க்கு நிகராக அஜித் கேட்ட சம்பளம், தெறித்து ஓடிய 4 தயாரிப்பாளர்கள்.. துணிவுடன் டாடா காட்டிய போனி கபூர்

ஏனென்றால் இவரைப் பொறுத்தவரை அதிகமாக பேசுவது கிடையாது, அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை நுணுக்கமாக தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதை இறங்கி உண்டு இல்லைன்னு பார்க்க வேண்டும். முக்கியமாக யாரையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது.

ஆனால் விஜய்யோ, இது அத்தனை விஷயங்களையும் யோசிக்காமல் சும்மா ரசிகர்களை மட்டுமே நம்பி கொண்டு அரசியலில் இறங்கி இருக்கிறார். இன்னும் சொல்ல போனால் சினிமாவில் இருக்கும் பல முக்கிய நடிகர்களுடைய சப்போர்ட்டுமே விஜய்க்கு கிடைக்கவில்லை. இதைப்பற்றி எதையுமே யோசிக்காமல் யாரோ விரித்த சூழ்ச்சி வலையில் கண்மூடித்தனமாக நம்பி இறங்கிவிட்டார்.

ஒருவேளை எலக்சனுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் முழு அரசியல்வாதிக்கான தகுதியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாரோ என்னமோ. எது எப்படியோ மக்கள் மனதில் இடம் பிடித்து நல்லது செய்தால் கண்டிப்பாக அரசியலில் இவருக்கான ஒரு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: விஜய் சொன்னத செஞ்சுட்டா அவர் பேரை பச்ச குத்துறன்.. பரபரப்பு பேட்டி கொடுத்த பிரபல நடிகர்

Trending News