வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பமே எம்ஜிஆர், விஜயகாந்த் திருப்பி அடித்த ரீவிட்.. விஜய்யை தூண்டும் மோசமான தொடர் தொந்தரவுகள்

அரசியல், சினிமா என்று இரட்டை சவாரி செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் முக்கால்வாசிக்கும் மேல் இவர் தான் உரிமையை கைப்பற்றி இருந்தார்.

இதனால் சினிமாவில் இவருடைய ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக கூட செய்திகள் பரவியது. இந்நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஒரு அதிர்ச்சிகரமான வேலையை செய்திருக்கிறது. அதாவது வாரிசு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு அவதார் 2 திரைப்படம் கொடுக்க மறுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாம்.

Also read: ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் கலக்கிய 5 ஹீரோக்கள்.. விஜய்க்கு செட்டாகாத நெகட்டிவ் கதாபாத்திரம்

அஜித்தின் துணிவு திரைப்படத்தை கைப்பற்றி இருக்கும் உதயநிதி அப்படத்தை அதிகபட்ச தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய இருக்கிறார். இதனால் வாரிசு திரைப்படத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி வந்த நிலையில் சரிசமமான தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் ஒதுக்கப்பட்டும் என்று உதயநிதி தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது தியேட்டர் ஓனர்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் கலக்கத்தில் இருக்கும் அவர்கள் எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் என்று உதயநிதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே சினிமாவில் இப்படி ஒரு சம்பவம் திமுக தரப்பினரால் நடந்திருக்கிறது. அதாவது எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அந்தப் படம் வெளியாக கூடாது என்று திமுக பல பிரச்சினைகள் செய்தது.

Also read: ரஜினியை முழுவதுமாக காப்பியடிக்கும் விஜய்.. எப்படியாச்சும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் நமக்கு வரணும் ஆசை.!

அதன் காரணமாக தான் எம்ஜிஆர் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதேபோன்று திமுக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடித்து அவருக்கு மிகப்பெரும் பிரச்சனையை கொடுத்தது. இதனால் விஜயகாந்த் அரசியல் ரீதியாக திமுகவை கடுமையாக எதிர்த்தார். இப்பொழுது அதே போன்ற ஒரு பிரச்சினையை தான் விஜய்யும் சந்தித்து வருகிறார்.

ஏற்கனவே விஜய் தீவிர அரசியலில் இறங்கும் முடிவில் இருக்கின்றார். அதற்காகத்தான் அவர் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார். இப்பொழுது அவருக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்து வருவதால் விரைவில் அவர் அரசியலில் குதிக்க வேண்டும், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also read: எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை

Trending News