திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சுயநலமாக நடந்து கொண்ட சிவகார்த்திகேயன், சூர்யா.. திறமையால் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த விஜய்

Actor Vijay: விஜய் இப்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக தெறிக்க விடும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கின்றது.

அந்த அளவுக்கு இப்படத்திற்கான வியாபாரம் ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்படி தனக்கென ஒரு மாஸ் அடையாளத்தை வைத்திருக்கும் விஜய் அவ்வளவு சுலபமாக இந்த இடத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப காலத்தில் பல விமர்சனங்களை கடந்து தான் முன்னேறி இருக்கிறார்.

Also read: வில்லத்தனத்தின் மொத்த உருவமான ஆண்டனி தாஸ்.. மிரட்டல் வீடியோவை வெளியிட்ட லியோ டீம்

அதிலும் இவர் நடிக்க வந்த சமயத்தில் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தான் நடித்து வந்தார். அப்போது தன்னுடைய சொத்தை எல்லாம் விற்று தான் எஸ் ஏ சந்திரசேகர், விஜய்யை வைத்து சில படங்களை எடுத்தார். அதன் மூலம் வளர்ச்சி அடைந்த விஜய் வெற்றி நடிகராக உருவெடுத்தார்.

ஆனால் சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் ஆரம்பத்தில் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து நன்றாக சம்பாதித்து விட்டு அதன் பிறகு தான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள். தற்போது தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடித்து இவர்கள் அதிக லாபம் பார்த்து வருகின்றனர். இது ஒரு வகையில் சுயநலம் தான்.

Also read: கைதி 2-விற்கு முன் அதகளப்படுத்த வரும் இரண்டாம் பாகம்.. வில்லன் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல

ஆனால் விஜய் ஆரம்பத்திலேயே தன்னுடைய சொந்த பணத்தில் தான் முன்னேறி இருக்கிறார். அதனாலயே இப்போது அவர் மாஸ் ஹீரோவாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் விஜய் தவிர வேறு யாரும் இப்படி சொந்த பணத்தில் முயற்சி செய்து சினிமாவில் முன்னேறியது கிடையாது.

இதை தற்போது கூறிவரும் ரசிகர்கள் சுயநலமாக யோசித்து வரும் நடிகர்கள் அடுத்தவர் இடத்திற்கு ஆசைப்பட மட்டும் தான் முடியும். ஆனால் ஜெயிக்க முடியாது எனக்கூறி வருகின்றனர். உண்மையில் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. லாபமோ நஷ்டமோ சொந்த முயற்சியில் முன்னேறிய விஜய்யை போல் எந்த நடிகரும் வளர்ந்தது கிடையாது என்பதே நிதர்சனம்.

Also read: லண்டனில் மாமியார் வீட்டு விருந்து முடித்தவுடன் விஜய் செய்யப் போகும் சம்பவம்.. ஆட்டம் காண போகும் அக்கட தேசம்

Trending News