வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இதெல்லாம் நீங்க செய்யக்கூடாது! விஜய்யை திட்டிய மனைவி சங்கீதா

பீஸ்ட் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட் வெளிவரக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக படக்குழுவினர் பார்த்து வருகின்றனர். அப்படி இருந்துமே விஜய் நடிப்பில் மாலில் எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின.

விஜய்க்கு சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்துள்ளனர். அப்படி சினிமா நடிகர் மற்றும் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் சாந்தனு. இவர் பல பேட்டிகளில் நான் விஜய்யின் தீவிர ரசிகன் என பலமுறை கூறியுள்ளார். இதனை அவர்கள் பெற்றோர்கள் கூட வெளிப்படையாக கூறியிருந்தனர்.

சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை திட்டியதை பற்றி சாந்தனு கூறியுள்ளார். அதாவது சாந்தனு விஜய்யின் ரசிகன் என்பதால் தனது கல்யாணத்தில் தாலியை விஜய் தான் எடுத்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதனால் விஜய் தன் கைபட தாலியை எடுத்து சாந்தனுவுக்கு கொடுத்தார். அதன்பிறகுதான் சாந்தனு, கிகி திருமணம் செய்தார்.

vijay santhanu marriage photo

ஆனால் விஜய் தன் மனைவியிடம் சாந்தனு தாலி எடுத்து கொடுக்க வேண்டுமென சொன்னான். அதனால் நான் தாலி எடுத்துக் கொடுத்தேன் என கூறியுள்ளார். அதற்கு விஜய்யின் மனைவி இதையெல்லாம் வயதில் மூத்த பெரியவர்கள் செய்ய வேண்டிய விஷயம். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்ய வேண்டிய விஷயம் என கூறி திட்டியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் சாந்தனு வெளிப்படையாக கூறியுள்ளார்.

Trending News