திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

யாரும் எதிர்பார்க்காத லுக்கில் வேட்டை ஆடப் போகும் தளபதி 66.. வம்சி செய்யப்போகும் தரமான சம்பவம்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் ஆன இப்படத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் நடிக்க உள்ளனர். தற்போது ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, சங்கீதா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தளபதி 66 தமன் இசையமைக்க உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக அவரது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 66 படத்தில் விஜய்யின் லுக் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகயுள்ளது. இதில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதாவது இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். கடந்த 2019 இல் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் பிகில் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இல்லாத இப்படத்தில் பெருமாளும் சென்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், தளபதி 66 படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும்போது இந்த சஸ்பென்ஸை உடைக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ராஷ்மிகா மந்தனா உறுதி செய்த நிலையில் மற்றொரு ஹீரோயின் உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Trending News