திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

பிரச்சனையை பார்த்து ஒதுங்கிப் போகும் விஜய்.. இப்படி இருந்தா அரசியலுக்கு வந்து என்ன பிரயோஜனம்?

Vijay: சினிமாவில் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்கு சப்போர்ட்டாக குரல் கொடுத்து பேசுவது தான் நியாயமாக இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் விஜய் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருப்பது நடிகராக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். இப்படிப்பட்டவரை எப்படி அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும் என்று பல கேள்விகள் தற்போது இவர் மீது திரும்பி இருக்கிறது.

அதாவது மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசிய விஷயம் தற்போது சர்ச்சையாக வெடித்து வருகிறது. இந்த ஒரு விஷயத்தால் த்ரிஷா எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாயிருக்கிறார் என்பது அவர் போட்ட டுவிட்டர் மூலம் அனைவரும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் லோகேஷ் த்ரிஷாவிற்கு சப்போர்ட்டாக மன்சூர் அலிகான் பேசியது தவறு என்று கண்டித்து டுவிட் போட்டிருக்கிறார்.

ஆனால் இந்த விஷயத்தை நடிகர் சங்கம் எதுவுமே கண்டுக்கவில்லை. அதே மாதிரி விஜய்யும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். அட்லீஸ்ட் தன்னுடன் நடித்த நடிகையை பற்றி தப்பாக பேசி இருக்கிறார் என்பதற்காகவது இவர் குரல் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் எதுவுமே எனக்குத் தெரியாத போல் மௌனம் காத்து இருப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.

Also read: விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?

அதுவும் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கக்கூடிய இவர் இப்படி இருப்பது சரியே இல்லை. இதுவே இந்த இடத்தில் எம்ஜிஆர் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேற மாதிரியாக இருந்திருக்கும். அதுவும் அவருடன் நடித்த நடிகைக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக தட்டி கேட்டிருப்பார். இப்படி இருந்ததால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடிந்தது.

அதே மாதிரி விஜய்யும் திரிஷாவுக்கு நடந்த அவமானத்தை கண்டித்து அறிக்கை விட வேண்டும். இல்லையென்றால் இதை வைத்து இவருக்கு கெட்ட பெயர் தான் வரும். அத்துடன் அரசியலுக்கும் ஒரு கரும்புள்ளியாக இது அமைந்து விடும். அது மட்டும் இல்லாமல் சக நடிகைகளுக்கு ஒரு அநியாயம் நடக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்க முடியாத இவரால் எப்படி அரசியலில் நடக்கும் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்க முடியும்.

அப்படிப்பட்ட இவர் அரசியலுக்கு வந்தும் பிரயோஜனம் இல்லை என்கிற மாதிரி இவர் மீது பல கேள்விகள் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களை குறி வைத்து பல நல்ல விஷயங்களை செய்தால் மட்டும் போதாது. அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தா மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து அரசியலில் ஜெயிக்க முடியும்.

Also read: தியேட்டரில் பலிக்காத பாச்சா.. ஓடிடியில் கெத்து காட்டிய திரிஷா

- Advertisement -spot_img

Trending News