செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

வளர்த்து விட்ட வரை கைபிடித்து தூக்கி விடும் விஜய்.. கதை திருட்டு இயக்குனரின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

சமீபத்தில் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் இப்படம் பான் இந்தியா படமாக மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது. காஷ்மீரில் கடும் குளிரின் மத்தியில் படப்பிடிப்பானது மும்முரமாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் லியோ படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்த படத்திற்கு வேண்டாம் என்று ஒதுக்கிய இயக்குனருடன் மீண்டும் கை கோர்த்து உள்ளார். அடுத்ததாக இயக்குனர் அட்லியுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில், இவ்வாறாக ஒப்பந்தம் செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் அடைய செய்துள்ளது.

Also Read: லோகேஷை பார்த்து மிரண்டு போன சைக்கோ இயக்குனர்.. மொத்த கோடம்பாக்கத்துக்கும் போட்ட பக்கா ஸ்கெட்ச்

இந்திய சினிமாவில் வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஏஆர் முருகதாஸ். சமீப காலமாகவே இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் இவர் ஒரு கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார். தற்பொழுது இவர் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்ய போவதாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற படங்களையும் தாண்டி, வித்தியாசமான கதையாக உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் விஜய்யை வைத்து இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பானது டிசம்பர் அல்லது  ஜனவரியில் துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

Also Read: வெறும் பெயரை வைத்து மட்டுமே விளையாடும் லோகேஷ்.. லியோ படத்திலிருந்து வெளிவந்த ரகசியம்

அதிலும் முருகதாஸ் உடன் இனிமேல் தளபதி கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று பல்வேறு வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தவிடுபிடியாக்கும் முறையில் விஜய் இவ்வாறான செயலை செய்துள்ளார். நடக்காது என்றார்கள் ஆனால் அடுத்த படம் இவருடன் தான் என்பதற்கு ஆணித்தரமாக முருகதாஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை முடித்தவுடன், விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கான பணிகளானது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறு இயக்குனர்கள் இந்தப் படத்தில் இணைய உள்ளார்களா என்று ஒவ்வொரு நாளும் வரும் அப்டேட்டுகளுக்காக ரசிகர்களை எதிர்பார்த்து வருகின்றனர். அதிலும் வளர்த்துவிட்ட இயக்குனரை விஜய் நன்றி மறக்காமல் தனது அடுத்த படத்தில் வாய்ப்பளித்ததன் மூலம், கைபிடித்து தூக்கி விட்டுள்ளார் என்று பெருமையாக பேசி வருகின்றனர்.

Also Read: விலங்கு பெயரில் வெளிவந்து மண்ணை கவ்விய விஜய்யின் 4 படங்கள்.. தலை தப்புமா லியோ!

Trending News