வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது பிரசாந்துக்கு எடுபடல.. சொந்தக்காசிலே சூனியம் வச்சுக்கிட்ட கொடுமை

டாப் ஸ்டார் பிரசாந்த், இன்றும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. விஜய் வளர்ச்சியில் எப்படி அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இருந்தாரோ, அதை போல் பிரசாந்தின் வளர்ச்சியில் அவரது தந்தை தியாகராஜன் இருந்தார். ஒரு காலகட்டத்தில் தியாகராஜன் பிரசாந்தின் எல்லா படத்திலும் மூக்கை நுழைத்து விட்டார்.

தியாகராஜனும் ஒரு இயக்குனர். ஹிட் ஆன பல படங்களை இயக்கியிருக்கிறார். அதன் காரணமாகவே மகனை வைத்து இயக்கும் மற்ற இயக்குனர்களின் வேலையில் தலையிட்டதால் அவர்கள் பாதியில் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அதன் பின் தியாகராஜனே அந்த படங்களை இயக்குவாராம்.

Also Read: காதலில் மூழ்கடித்த பிரசாந்தின் 5 படங்கள்.. நட்பிற்காக காதலையே தியாகம் செய்த சாக்லேட் பாய்

யாருக்காக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும் தங்களுடைய வேலையில் இடையூறு செய்தால், அதை அப்படியே விட்டுவிட்டு செல்ல தான் செய்வார்கள். இதேபோன்றுதான் பிரசாந்தை வைத்து இயக்கும் இயக்குநர்களை ஓவர் கரெக்சன் செய்து டார்ச்சர் செய்திருக்கிறார் தியாகராஜன்.

அதிலும் சமீபத்தில் கூட பிரசாந்த் நடித்து முடித்து இருக்கும் படம் அந்தகன். இந்தப் படத்தை முதலில் மோகன் ராஜா தான் ரீமேக் செய்வதாக இருந்தது. பின்னர் தியாகராஜன் தலையிட்டதால், அவர் கழண்டுவிட்டார். 2018ல் ஆயுஷ்மான் குரானா, தபு , ராதிகா ஆப்தே மற்றும் அனில் தவான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த “அந்தாதுன் ” ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன் படம்.

Also Read: சப்போட்டிங் கேரக்டரில் அஜித் நடித்த 5 படங்கள்.. தளபதிக்கு உயிர் நண்பராக இருந்த ஏகே

டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தில் ஒரு பார்வையற்ற பியானோ வாசிப்பவர் ஒரு ஓய்வு பெற்ற நடிகரின் கொலையில் தெரியாமல் சிக்கிக் கொண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் பிரசாந்த் பல வருடம் கழித்து பெரும் நம்பிக்கை உடன் எதிர்பார்த்த அளவு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு வேலை இதை மோகன் ராஜா கைவசம் கொடுத்திருந்தால் படம் வெற்றி பெற்று இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் சொந்தக்காசிலே சூனியம் வச்சுக்கிட்ட மாதிரி தியாகராஜனின் தலையிடால்தான் பிரசாந்த் முன்னேற முடியாமல் போனது. இதற்கு மாறாக விஜய்யின் தந்தையால் தான் அவர் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார். தளபதிக்கு ஒர்க் அவுட் ஆனது பிரசாந்திற்கு செல்லுபடியாகாமல் போனது.

Also Read: நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்

Trending News