திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கங்குவா நடிகருடன் மோத தீயாய் உழைக்கும் விஜய்.. விஜய்69 பட புதிய அப்டேட்

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஜய் 69. இப்படத்திற்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பு? ஏனென்றால் இது தளபதியின் கடைசி படம் என்பதால்தான்.

இப்படத்தில் ஒரு முதிர்ச்சியான தோற்றத்திலும், இளைஞர் கெட்டப் என விஜய் 2 கேரக்டரில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. இதற்கு முன், கத்தி, பிகிலு, தி கோட் ஆகிய படங்களில் டபுள் கேரக்டரில் அசத்தினர் விஜய்.

இதிலும் தனது நடிப்பு திறமையை அவர் காட்ட தீயாக உழைத்து வருகிறார். கடைசிப் படம் என்பதால் அதை ரசிகர்களுக்கு வெற்றிப்படமாக கொடுக்க நினைத்துள்ளார்.

ஸ்லிம் உடலை முற்றுக்கேற்றி வரும் விஜய்?

அனிமல், கங்குவா பட புகழ் பாபி தியோல் நல்ல உயரம் எடை. இப்படத்தில் அவர்தான் வில்லன். அவருடன் மோதும் ஆக்சன் காட்சிகளுக்காக விஜய் ஜிம் சென்று உடல் எடையை கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தன் படங்களில் இல்லாமல், நிஜத்திலும் ஸ்லிமாக உடலை வைத்திருப்பவர் விஜய். அதுதான் டேன்ஸ் ஆடும் போது அவருக்கு கை கொடுகிறது. இதற்காக பல ஆண்டுகளாக தன் உடல் எடையை ஒரே மாதிரி மெயிண்டெயின் செய்து வருகிறார்.

விஜய்69 படத்துக்காக ஜிம்முக்கு சென்றுள்ள விஜய் தன் உடலை கொஞ்சம் முறுக்கேற்றி வருகிறார். இதற்காக அவர் தீயாக உழைத்து வருவதாக தகவல் வெளியாகிறது. எங்களுக்காகத்தான் இப்படி தளபதி மெனக்கெடுகிறார் என ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இதை படக்குழு விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

Trending News