வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

செஞ்ச தப்பை ஒத்துக்கணும்.. கேரளாவுல டிவோர்ஸ் ஆனாலும் தனுஷ் தான் காரணமா?

பாடகர் விஜய் யேசுதாஸ், தந்தையைப் போல சினிமா உலகில் சாதிக்க வேண்டும் என எண்ணிய இவர், கடந்த 2000ம் ஆண்டு வித்யாசாகரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். பின், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

தந்தை யேசுதாஸின் குரல் போன்றே இவரது குரலும் இருப்பதால், இவர் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் சினிமாவில் ஒரு பாடகராக மட்டும் நிற்காமல், நடிப்பிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தமிழ் மொழியில் முதலில் நடிகர் தனுஷூடன் மாரி படத்தில் நடித்தார். இதில் மிடுக்கான போலிஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இதையடுத்து அவர் படைவீரன் எனும் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பலருக்கு இந்த விஷயமே தெரியாது என்பது தான் உண்மை. மேலும் இவர் தனுஷுடன் வேலை பார்க்கும் அந்த காலகட்டத்தில் தான் விவாகரத்தும் ஆனது. இதை தொடர்ந்து இவர்கள் விவகாரத்திற்கு காரணமும் தனுஷ் தான் என்று கிளப்பி விட ஆரம்பித்து விட்டார்கள்.

உண்மையில் நடந்தது என்ன?

என் வாழ்க்கையிலே நான் எடுத்த மிகவும் வேதனையான முடிவு இதுதான். எங்கள் வாழ்க்கை குறித்து எனக்கும் தர்ஷனாவிற்கும் நல்ல புரிதல் இருந்தாலும், எங்கள் விவாகரத்து முடிவை தற்போதுவரை பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என வருத்தமாக கூறினார்.

மேலும், ஒருவர் தான் செய்த தவறுகளுக்கும் செயலுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லையென்றால் இத்தனை நாள் செய்த அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என பேசியுள்ளார். இவரின் இந்தக் கருத்து பலரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஏன் என்றால் இருவரும் ம்யூச்சுவலாக பிரிவதாக தான் கூறியிருந்தார். எந்த சண்டையும் இல்லை, ஆனால் சேர்ந்திருப்பது நடவாத காரியம் என்றே அவர் பேசியிருந்தார். இந்த நிலையில், இவர் சொன்ன இந்த கருத்து, “அப்போ பெருசா என்னவோ நடந்திருக்கு..” என்று கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending News