அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. முதல் நாளில் ரூ.265 கோடிக்கு மேல் வசூலித்தாகத் தகவல் வெளியாகிறது.
இந்திய அளவில் முதல் நாளில் 165 கோடி வசூலித்து நம்பர் 1 வசூல் குவித்த படம் என்ற பெருமை பெற்றுள்ளது. புஷ்பா படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், புஷ்பா 2 படமும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் கடைசிப் படம் மீது எகிறும் எதிர்பார்ப்பு
இப்படத்தின் வசூல் சாதனையை ’’விஜய் 69’’ படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தன் கேரியரில் கடைசிப் படத்தில் நடிக்கிறார். இதில், பூஜா ஹக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தவெக கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய். அதனால் அவரது கடைசிப் படத்தை ஜனரஞ்சகமான, சமூக அக்கறை, ஆக்சன், அரசியல் உள்ள படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
விஜய்69 இந்திய சினிமாவில் இதற்கு முந்தைய அனைத்து ரெக்கார்டுகளையும் உடைக்கும் என கூறப்படுகிறது. இதன் வியாபாரம் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.
1000 கோடிதான் டார்கெட் அப்பதான் உச்சநட்சத்திரம் பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
இப்போது முதல் நாள் வசூலில் புஷ்பா 2 நம்பர் 1 ஆக உள்ளது. உலகம் முழுவதும் வசூலித்த படங்களில் தங்கல், ஜவான் உள்ளது.
விஜய்69 படம் இந்த அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். விஜய் தன்னை உச்ச நடிகர் என்பதை நிரூபிப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.