வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முத்துவை மகனாக நினைத்து அட்வைஸ் கொடுத்த விஜயா.. மீனாவுக்கு சாதகமாக ரோகிணி எடுத்த முடிவு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனா க்ரிஷை தத்தெடுக்க போவதாக குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டார். இதை கேட்ட ரவி மற்றும் சுருதி நீங்கள் எடுத்த முடிவு நல்ல விஷயம். அதனால் எங்களுடைய சப்போர்ட் எப்பொழுதுமே உங்களுக்கு உண்டு என்று முத்துக்கு சாதகமாக பேசுகிறார்கள்.

அதே மாதிரி அண்ணாமலையும் உங்களுடைய இஷ்டம், உங்களுக்கு ஓகே என்றால் அதை செய்யுங்கள் என்று அவரும் நம்பிக்கையுடன் பேசி விட்டார். ஆனால் வழக்கம் போல மனோஜ் மற்றும் விஜயா, முத்து சொன்னதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதிலும் மனோஜ், உங்களுக்கு என்ன வயசு ஆயிடுச்சு. உங்களால ஒரு குழந்தை பெத்துக்க முடியாதா என்று கேட்கிறார்.

பிளான் பண்ணி க்ரிஷை மனோஜுடன் நெருங்க வைக்கும் ரோகிணி

அத்துடன் விஜயா, யாரோ பெத்த பிள்ளை எல்லாம் இந்த வீட்டில வாரிசாக்க முடியாது. ஏன் உங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறக்க தானே செய்யும். அதை கொஞ்சி அதுக்கு தேவையான எல்லா விஷயத்தையும் நாம் பார்க்கலாம் என்று முதல் முறையாக முத்துவை மகனாக நினைத்து விஜயா பேசுகிறார். ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத முத்து நாங்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருக்கிறோம்.

அதனால் க்ரிஷ் பாட்டி ஓகே என்று சம்மதம் தெரிவித்து விட்டால் உடனே நாங்கள் தத்தெடுத்து விடுவோம் என்று கூறிவிட்டார். இதை கேட்டதும் ரோகிணி எதுவும் பேச முடியாமல் ரூமுக்குள் வந்ததும் அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் அவர்கள் போன் பண்ணால் நீ எடுத்து பேச வேண்டாம். வீட்டிற்கு வந்து பேசினாலும் இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் திருப்பி உன்னிடம் வராதபடி பார்த்துக் கொள் என்று கோபத்துடன் சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக மீனா மற்றும் முத்து அடுப்பாங்கரையில் பேசிக்கொண்டு கிரிஷ் தத்தெடுக்க போவதை முதலில் அவனுடைய பாட்டியிடம் சொல்லிப் பெர்மிஷன் கேட்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படி மீனா, ரோகிணியின் அம்மாவுக்கு போன் பண்ணுகிறார். மீனா போன் பண்ணுகிறார் என்றதும் க்ரிஷ் அதை அட்டென்ட் பண்ணி பேச பார்க்கிறார்.

ஆனால் ரோகிணி அம்மா, போனை வாங்கிக் கொண்டு இனிமேல் இவங்க கால் பண்ணா நீ பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு அட்டென்ட் பண்ணவில்லை. பிறகு முத்து, சரி நம்ம நேரடியாக சந்தித்து பேசினால் தான் சரியாக இருக்கும் என்று மீனாவிடம் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை ரோகிணி, தோழியிடம் சொல்லி கிரிஸ்க்கு அம்மாவாக நான் இருக்கேன்.

அப்படி இருக்கும்போது அவன் ஏன் தத்து பிள்ளையாக வளர வேண்டும். ஊரில் இருக்க பேய் தானே, முத்துவும் மீனாவும் ரொம்பவே ஆடுகிறார்கள். அதனால் நான் ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன். இங்கேயே நான் தினமும் பார்க்கும் படியாக ஒரு வீட்டில் தங்க வைத்து கிரிசை இங்கே இருக்கும் ஸ்கூலில் சேர்க்கப் போகிறேன் என்று சொல்கிறார்.

அத்துடன் க்ரிஷ் பற்றிய விஷயங்கள் தெரிந்தாலும் மனோஜ் மற்றும் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை ஒதுக்காத படி இருக்க வேண்டும் என்றால் எனக்கு முதலில் குழந்தை பிறக்க வேண்டும். அப்படி குழந்தை பிறந்து விட்டால் மனோஜ் மட்டும் இல்லை, அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் என்னை வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த குழந்தை அவர்களுடைய வாரிசு அதற்காகவாவது மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று ரோகிணி பிளான் பண்ணி விட்டார்.

அதன் படி ரோகிணி, மனோஜை கூட்டிட்டு எங்கேயாவது வெளியூர் போகலாமா என்று பிளான் பண்ணுகிறார். அந்த வகையில் கூடிய விரைவில் ரோகினி அம்மாவாகி மனோஜ் மற்றும் விஜயா குடும்பத்திற்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கப் போகிறார். அதே மாதிரி கிரிஷும் அந்த குடும்பத்திற்குள் வந்து சேர்ந்து விடுவார். ஏனென்றால் எப்படியும் ரோகினி, மீனா ஆசைப்பட்ட மாதிரி தத்து எடுப்பதற்கு சம்மதத்தை கொடுத்து விடுவார்.

அதற்கு காரணம் க்ரிஷ் இந்த வீட்டிற்குள் நுழைந்த பின் ஒவ்வொருவரிடமும் பேசி பழகி அவர்கள் மனதில் ஒரு பாசத்தை உண்டாக்குவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம். அத்துடன் மனோஜ் மனதிலும் இடம் பிடித்து விட்டால் க்ரிஷை யாரும் வெறுக்க மாட்டார்கள். அதுவே என்னை அந்த குடும்பத்தில் இருந்து பாதுகாக்க ஒரு வழியாக இருக்கும் என்று முடிவெடுக்க போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News