புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்து விரித்த வலையில் சிக்கிய விஜயா.. மீனா போடும் ஆட்டம், மனோஜ் அடி வாங்குவதை கண் குளிர பார்க்கும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் ஒரு பயந்த சுபாவம் அதனால் ஈஸியாக தவறு பண்ணினால் மாட்டிக் கொள்வான் என்று முத்துவிற்கு தெரியும். அதனால் என்ன பண்ணினால் அவன் செய்த பொய்ப் பித்தலாட்டம் வெளியே வரும் என்று யோசித்த முத்து, மந்திரவாதியம் மாந்திரீகம் என பொய் சொல்லி ஒத்த எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து மொத்த விஷயத்தையும் அப்பட்டமாக தெரியப்படுத்திவிட்டார்.

அதாவது எலுமிச்சம் பழத்தை பூஜை ரூமில் வைத்து பூஜை செய்தால் தங்க நகையை யார் எடுத்துட்டு கவரிங் நகையாக மாற்றி வைத்தார்களோ, அவர்களுடைய வாய் கோணவாயாக போகிறோம் என்று முத்து சொல்லி விட்டார். இதனால் பயந்து போன விஜயா மற்றும் மனோஜ் வேறொரு மந்திரவாதியை சந்தித்து புது எழுமிச்சை பழத்தை கொண்டு வந்து பூஜை ரூமில் வைத்து விட்டார்கள்.

அவமானத்தில் தலை குனிந்து நிற்கும் ரோகினி

ஆனாலும் மனோஜ்க்கு இருந்த பயத்தால் விடிய விடிய தூங்காமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். இதை புரிந்து கொண்ட முத்து, இன்னும் பயத்தை அதிகரிப்பதற்காக ஒரு ஆட்டம் ஆடினார். அதன்படி மனோஜ் உண்மையிலேயே பயந்து போய் விஜயாவிடம் முத்து வைத்த எலுமிச்சம்பழத்தை எடுத்து தூரப்போட்டு விடலாம் என்று சொல்கிறார். அதனால் விஜயாவும் அந்த எலுமிச்சம் பழத்தை பூஜை ரூமில் இருந்து எடுத்துட்டு வருகிறார்.

அந்த நேரத்தில் முத்து அனைவரையும் கூப்பிட்டு விஜயா மற்றும் மனோஜின் உண்மையான முகத்திரையை வெட்ட வெளிச்சமாக காட்டிவிடுகிறார். அப்பொழுது மனோஜிடம் அதட்டி கேட்ட அண்ணாமலை, என்ன மன்னிச்சிடுங்க அப்பா நான் தான் மீனாவின் நகையை எடுத்துட்டு போய் வித்து விட்டேன். அதற்கு பதிலாக கவரிங் நகையை எடுத்து வந்து அம்மாகிட்ட கொடுத்தேன் என்று சொல்லிவிட்டார்.

இதைக்கேட்ட அண்ணாமலை, மனோஜை வெளுத்து வாங்கும் அளவிற்கு அடித்து விடுகிறார். விஜயா தடுக்கும் பொழுது அண்ணாமலை, நீ எல்லாம் பேசாத வாயை திறக்காத. இப்படிப்பட்ட ஒரு அம்மா வீட்டில் இருந்து பிள்ளைகள் தப்பு பண்ண தான் செய்வாங்க என்று விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். அத்துடன் மனோஜ் அடி வாங்கும் பொழுது, ரோகிணி தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்.

ஆக மொத்தத்தில் மனோஜ் மற்றும் விஜயா கையும் களவுமாக மாட்டிய நிலையில், ரோகிணி போட்ட ஆட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு கட்டிவிட்டார் முத்து. இதை பயன்படுத்திய மீனா, ரோகினிடம் இப்ப புரிகிறதா என் புருஷன் எதற்கு உங்கள் புருஷனை எப்ப பார்த்தாலும் மட்டம் தட்டி பேசுகிறார் என்று. ஏனென்றால் அவருடைய செய்கை எல்லாம் அப்படித்தான் இருக்கிறது.

இவர் சொந்தமாக சம்பாதித்து லாபம் சம்பாதித்ததாக சொல்லி என் புருஷனை எப்படி நீங்க அவமானப்படுத்தி பேசினீர்கள் என்று ரோகிணியை மீனா நல்ல குத்தி காட்டி பேசுகிறார். இதுதான் மீனாவின் ஆட்டம் ஆரம்பம் என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணியை வச்சு செய்யப் போகிறார். இந்த ஒரு விஷயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் சுருதி மற்றும் ரவி, மனோஜை ஏளனமாக பார்த்து நக்கல் அடித்து பேசுகிறார்கள்.

இது மனோஜ்க்கு கிடைக்கும் தண்டனை என்பதை விட ரோகிணிக்கு இதுதான் சரியான அவமானம் என்று சொல்வதற்கு ஏற்ப தரமான சம்பவத்தை முத்து மீனா செய்து விட்டார்கள். இதே மாதிரி மனோஜ் பிசினஸ் பண்ணும் பணம் ஜீவா கொடுத்த அண்ணாமலை பணம் என்பதும் கூடிய விரைவில் தெரிந்து விட்டால் ரோகினியை கண்முடித்தனமாக நம்பும் விஜயா ஆட்டத்திற்கு தரமான பதிலடியாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News