திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீனாவின் தம்பியை அசிங்கப்படுத்தி ருத்ர தாண்டவம் ஆடிய விஜயா.. முத்துவின் பிரச்சினையில் குளிர்காயும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி தன்னுடைய வாழ்க்கை, சந்தோசம் தான் முக்கியம் என்று சுயநலமாக யோசித்து மீனா மற்றும் முத்துவின் வாழ்க்கையில் ஒலை வைத்துவிட்டார். அதாவது மீனா மற்றும் முத்து தன்னுடைய விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஏதாவது முக்கியமான பிரச்சினை வர வேண்டும் என்று அல்பத்தனமாக யோசித்து மீனாவின் தம்பி திருடிய வீடியோவை சிட்டி இடம் கொடுத்து விட்டார்.

உடனே சிட்டி, அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு சத்யா பெயரை டேமேஜ் பண்ணி விட்டார். ரோகிணி இது போதாது என்று விஜயாவிடமும் அந்த வீடியோவை காட்டிவிட்டார். வீடியோவை பார்த்த விஜயா நேரடியாக மீனா வீட்டுக்கு சென்று சத்யாவை செருப்பாலே அடித்து அசிங்கப்படுத்திவிட்டார். பிறகு எதற்காக என்ன காரணம் என்று மீனா மற்றும் குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது.

அத்துடன் விஜயா பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் மொத்த குடும்பமும் தலைகுனிந்து அவமானப்பட்டு நின்று விட்டார்கள். இதுதான் சான்ஸ் என்று விஜயா, மீனாவைப் பார்த்து வீட்டு பக்கம் வந்து விடாதே என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். அதோடு நான் சத்யாவை போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்காமல் விடமாட்டேன் என்றும் பிளாக் மெயில் பண்ணி இருக்கிறார்.

இது எதுவும் தெரியாது முத்து, சவாரி முடித்து ஊருக்கு திரும்புகிறார். அதன்பின் வீடியோ வெளிவந்த விஷயத்தை கேள்விப்பட்டு சத்யாவை பார்ப்பதற்கு முத்து போகப் போகிறார். பிறகு அம்மா செய்த காரியத்திற்கு சரியான பாடத்தை கொடுக்கும் வேண்டும் என்பதற்காக பதிலடி நிச்சயம் கொடுக்கப் போகிறார். இதற்கிடையில் சத்யாவை பார்த்த சிட்டி இந்த வீடியோவை வெளியே அனுப்பியது உன் மாமன் முத்து தான் என்று வீணாக பழி சுமத்தி விட்டார்.

அப்படி பழி சுமத்திவிட்டால் சத்யாவிற்கும் முத்துவுக்கும் இடையே பிரச்சனை வரும் என்பதினால் இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருக்கிறார். ஆனால் தற்போது வரை சத்யா, முத்து மாமா இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். இவ்வளவு தூரம் ஆனதற்கு முக்கிய காரணம் இந்த ரோகிணி தான். இந்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்க போகும் முத்து மற்றும் மீனாவின் துன்பத்தைக் கண்டு ரோகினி குளிர் காயப் போகிறார்.

ஆனால் இதற்கு பின்னணியில் ரோகினி தான் காரணம் என்று முத்துவுக்கு கூடிய விரைவில் தெரிய வரப்போகிறது. அப்பொழுதுதான் ரோகினி முகத்திரை ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரியவர போகிறது. ஆணவம் பிடித்த விஜயாவிற்கு ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிற விஷயமும் தெரிய வரப்போகிறது. அதை மாதிரி பணக்கார பெண்ணும் இல்லை, நடுத்தர குடும்பத்தில் உள்ள ரோகினி என்ற விஷயம் தெரிந்த பிறகு விஜயா மூஞ்சில் ஈ ஆடப்போகிறது.

Trending News