Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி சொன்ன எக்கச்சக்கமான பொய்களால் பல மாதங்களாக ஏமாந்து வந்த விஜயாவின் குடும்பம், தற்போது ரோகிணியின் ஒரு விஷயம் வெளிவந்ததும் எதுவும் பண்ண முடியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
அதாவது ஆரம்பத்தில் ரோகினி பணக்கார வீட்டு பொண்ணு, மலேசியாவில் அவங்க அப்பா இருக்கிறாங்க, மாமா பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க என்று பொய்களை அடுக்கி, பார்லருக்கு ஓனர் என்று சொல்லி அதே சமாளிப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்திருக்கிறார். ஆனால் எல்லாத்துக்கும் சேர்த்து தற்போது ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை, மாமாவாக நடிக்க வந்தவர் தான் பிரவுன் மணி என்ற உண்மை தெரிந்து விட்டது.
ஆனாலும் ரோகினி இந்த மாதிரி பொய் சொல்லி ஏமாற்றியதற்கு பெருசாக எதுவும் பண்ண முடியாது. அதனால் தான் கோபத்தை காட்டும் விதமாக விஜயா, ரோகினியை வெளியே அனுப்பி இருக்கிறார். இருந்தாலும் வேறு எதுவும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப ரோகிணி தெனாவட்டாக தான் இருக்கிறார். அந்த வகையில் மறுபடியும் ஏதாவது பொய்களை சொல்லி பெருசாக டிராமா பண்ணி எப்படியும் வீட்டிற்குள் வந்துவிடுவார்.
இதனை அடுத்து ரோகிணிக்கு கல்யாணம் ஆகிவிட்டது, க்ரிஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார் என்ற உண்மை தெரிந்தாலும் அப்பொழுதும் எதுவும் பண்ண முடியாத ஒரு சூழ்நிலையில் தான் விஜயா குடும்பம் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறது. ஏனென்றால் சட்டப்படியும் சரி, மனோஜ் மனசிலும் சரி ரோகினி மனைவி என்ற அந்தஸ்தை பிடித்து விஜயாவின் மருமகள் என்ற முத்திரையை பெற்றுக் கொண்டார்.
தற்போது விஜயா, பார்வதி இடம் வந்து புலம்புகிறார். உன் மூலமாக தான் ரோகிணி எனக்கு தெரியும். நீ சொன்னதனால் தான் நான் நம்பினேன் என்று பார்வதி மீது தவறு இருப்பது போல் விஜயா பேசுகிறார். அதற்கு பார்வதி நான் ரோகிணி பற்றி எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. நீ தான் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு என்று பேராசையில் உன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தாய்.
அதுமட்டுமா மற்ற மருமகளை கொஞ்சம் கூட மதிக்காமல் ரோகிணி தான் பெருசு என்று தலையில் தூக்கி வைத்து ஆடினாய். அதனால் தான் உன்னை ஏமாற்றும் விதமாக ரோகிணி பொய்களை சொல்லி அடுக்கி வந்தார் என்று பார்வதி விஜயாவிடம் ஓப்பனாக பேசுகிறார். பார்வதி இப்படி சொல்ல சொல்ல விஜயா ரொம்பவே ஆக்ரோஷமாக போய்விட்டார். ஆனாலும் வீட்டிற்கு போனால் மீனா முகத்தில் முழிக்க ஒரு மாதிரியாக இருக்கும் என்ற அவமானத்தில் பார்வதி வீட்டிலேயே இருக்கிறார்.
அடுத்ததாக முத்து மற்றும் மீனாவுக்கு ரவி சுருதி கால் பண்ணுகிறார்கள். அப்பொழுது ரோகினி பொய் சொன்ன விஷயத்தையும் வீட்டில் ரோகிணி இப்பொழுது இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். பிறகு மீனா, மாமனாரிடம் நம்ம குடும்பத்திற்கு நேரமே சரியில்லை. பாவம் எப்படியாவது ரோகிணியை கூட்டிட்டு வரணும் என்று தியாகி மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து மனோஜ், ரோகிணி ஏமாற்றியதை நினைத்து நண்பரை கூட்டி குடித்துவிட்டு கலாட்டா பண்ண ஆரம்பிக்கிறார். அப்பொழுது டிராபிக் போலீஸ் இடம் மாட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விடுகிறார். அங்கே நிதானம் இல்லாமல் இருக்கும் மனோஜ், டிராபிக் போலீஸ் அருனிடம் என்னுடைய தம்பி யார் என்று தெரியுமா? அவன் வந்தா உங்கள எல்லாம் சும்மா விட மாட்டேன் என்று அருணை வெறுப்பேத்தும் விதமாக சொல்கிறார்.
ஏற்கனவே அருணுக்கு முத்து மீது கோபமும் இருக்கிறது, தீராத பகை இருக்கிறது. அதனால் இதை மனதில் வைத்து முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக புத்தி கெட்டு திரியும் மனோஜ்க்கு செக் வைக்கப் போகிறார்.
மறுமொழி இடவும்