சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பேராசையால் கனவு கோட்டை கட்டி வரும் விஜயா.. ரோகிணி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கிராமத்திலிருந்து சென்னைக்கு அனைவரும் வந்ததும் விஜயா பழைய மாதிரி அவருடைய வேலையை ஆரம்பித்து விட்டார். அதாவது கிராமத்தில் பாட்டி இருந்ததால் மீனாவை கொத்தடிமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்த ஆதங்கத்தை எல்லாம் தீர்க்கும் விதமாக சென்னை வீட்டுக்கு வந்ததும் மீனாவை மறுபடியும் வேலைக்காரி மாதிரி நடத்த ஆரம்பித்து விட்டார்.

பாவம் மீனாவும் இந்த ஒரு விஷயத்தில் எதுவும் எதிர்த்து பேச முடியாததால் எல்லாருக்கும் அடிமை வேலை பார்க்கிறார். அடுத்ததாக விஜயாவின் தோழி வீட்டிற்கு வந்து தனியாக இரண்டு பெரும் பேசப் போகிறார்கள். அப்பொழுது எப்படியாவது முத்துவையும் மீனவையும் வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும் என்று விஜயா சொல்கிறார்.

அதற்கு முன்னதாக மீனா வீட்டு வாசலில் வைத்திருக்கும் பூக்கடையை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அதற்கு ஏற்ற மாதிரி பிளான் பண்ணுகிறார். அத்துடன் விஜயா, மனோஜ்க்கு ரோகிணி அப்பாவிடம் எப்படியாவது சொல்லி பிசினஸ்க்கு ஒரு வழி பண்ண வேண்டும் என்று கனவு கோட்டை கட்டுகிறார். ஆனால் ரோகினி பொறுத்தவரை பொய் பித்தலாட்டம் பண்ணி பணக்கார வீட்டு பெண்ணாக அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார்.

Also read: விஜயாவை தோற்கடித்து மண்ணை கவ்வை வைத்த முத்து.. ஆட்ட நாயகனாக கலைக்கட்டும் சிறகடிக்க ஆசை

இதனை அடுத்து ரோகிணி வேலை பார்க்கும் பியூட்டி பார்லரின் உரிமையாளர் பார்லருக்கு போகும் வழியில் கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அதனால் ட்ராவல்ஸ்-க்கு போன் பண்ணி ஒரு காரை வர சொல்லுகிறார். அப்பொழுது பார்த்தா முத்து தான் வருகிறார். பிறகு இவரை ட்ராப் பண்ணுவதற்காக முத்து கூட்டிட்டு போகிறார்.

அப்பொழுது ரோகிணி வேலை பார்க்கும் பார்லருக்கு உரிமையாளர் இறங்கும் பொழுது முத்துவிற்கு தெரியவரும் இது ரோகினியின் பார்லர் என்று. அந்த நேரத்தில் உரிமையாளர் இது என்னுடைய பார்லர், ரோகிணி இங்கே வேலை பார்க்கிற பொண்ணு என்ற உண்மை சொல்லப் போகிறார். ஆக மொத்தத்தில் ரோகினி பற்றிய இந்த ஒரு உண்மை தற்போது முத்துவிற்கு தெரிய வரப்போகிறது.

முத்துவிற்கு தெரிந்தால் சும்மா இருப்பாரா, இதுதான் கிடைத்த சான்ஸ் என்று குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ரோகிணி பற்றிய உண்மையை போட்டு உடைக்க போகிறார். அதன் பிறகு எப்படியும் இதை சமாளிக்கும் விதமாக மறுபடியும் பொய் சொல்லி ரோகிணி எல்லாரையும் ஏமாற்றப் போகிறார். ஆனாலும் ஓவராக ஆட்டம் போட்டு வரும் ரோகிணிக்கு விழும் முதல் அடியாக இது இருக்கப் போகிறது.

Also read: கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட நினைக்கும் விஜயா.. முத்துவிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி

Trending News