புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவுடன் கூட்டணி போட்ட அண்ணன் தம்பி.. மீனா வடிக்கும் கண்ணீரில் ஆனந்தப்படும் விஜயா ரோகினி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் வீட்டிற்கு முத்து வந்ததை பார்க்காமல் மீனாவின் அம்மா முத்துவை வாய்க்கு வந்தபடி திட்டி பேசுகிறார். பிறகு உள்ளே நுழைந்த முத்து கோபத்தில் சண்டை போடுகிறார். அத்துடன் மீனாவின் தம்பியை போட்டு மறுபடியும் அடித்து விட்டு வீட்டை விட்டு வெளியே போகிறார்.

இதனால் மீனாவின் அப்பாவிற்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய வந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போய்விடுகிறார்கள். பிறகு மீனாவின் வீட்டில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் இருந்து வேதனைப்படுகிறார்கள். அடுத்து மீனா இதையெல்லாம் மறந்துவிட்டு அப்பா நினைவு நாள் அன்று நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லி வீட்டிற்கு போய்விடுகிறார்.

போனதும் முத்துவின் அப்பா நடந்ததை பற்றி கேட்கிறார். மீனா அதற்கு அழுதுகிட்டே முத்து அங்கு வந்து பிரச்சனை பண்ணியதை சொல்லி விடுகிறார். பிறகு முத்து வந்ததும் அண்ணாமலை அவரை கண்டிக்கிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் விஜயா மற்றும் ரோகினி மனதிற்குள் ஆனந்தப்பட்டுக் கொள்கிறார்கள். இந்த சண்டையை பெரிதாக்கி அப்படியே பூக்கடையும் காலி பண்ண வேண்டும் என்று விஜயா பிளான் பண்ணுகிறார்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

அடுத்து முத்து, மீனாவிடம் வந்து எல்லாரும் நல்லவர்களாக ஆகிவிட்டீர்கள். இப்ப நான் மட்டும்தான் கெட்டவன் ரவுடி என்கிற மாதிரி என்னைய ஆக்கிவிட்டாய் என்று கூறுகிறார். அதற்கு மீனா நான் என்ன பண்ணினேன், எல்லாம் நீங்க பண்ற விஷயம் தான் இப்போது இந்த அளவுக்கு வந்திருக்கிறது என்று சொல்கிறார்.

இதனை தொடர்ந்து ரவியை இரண்டு நாள் அவுட்டிங் போறதுக்காக சுருதி கூப்பிடுகிறார். ஆனால் ரவி வேண்டாம் என்று மறுப்பு சொல்லிவிட்டு ரவி மொட்டை மாடிக்கு போகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே முத்து மற்றும் மனோஜ் அங்கே தூங்குவதற்கு நிற்கிறார்கள். தற்போது ரவியுடன் சேர்ந்து மற்ற இரண்டு பேரும் பொண்டாட்டிக்குளுடன் இருக்கும் பிரச்சினையை சொல்லி புலம்புகிறார்கள்.

ஆக மொத்தத்தில் அண்ணன் தம்பிகள் தற்போது பொண்டாட்டி மீது கோபப்பட்டு ஒன்று சேர்ந்து சந்தோஷமாக சிரிச்சு பேச ஆரம்பித்து விட்டார்கள். அதே மாதிரி அடுப்பங்கரையில் இருந்து கொண்டு ஸ்ருதி மற்றும் ரோகிணியும் அவர்களுடைய கணவர்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள். இதே இடத்தில் மீனாவும் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் விஜயா பார்த்தால் தான் வயிற்று எரிச்சலில் பொங்க போகிறார்.

Also read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

Trending News